மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு | சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா | ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் | என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா |
"கஜினி படம் மூலம், இந்திக்கு சென்றவர் அசின். போன வேகத்திலேயே அமீர் கான், சல்மான் கான் என, முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்ததால், பிரபல இந்தி நடிகைபட்டியலில் இடம் பிடித்தார் அசின்.இருப்பினும், அக்ஷய் குமாருக்குஜோடியாக, அவர் நடித்த, "கில்லாடி 786 உட்பட சில படங்கள்தோல்வியடைந்ததால், அசினின்மார்க்கெட்டும், ஏறியவேகத்தில் இறங்கியது.
இந்த சூழலில், பிரபுதேவாவுடன் நெருங்கி பழகுவதாக,அசின் பற்றிய செய்திகள், பாலிவுட்டில் பற்றி எரிந்தன. இதனால், அதிர்ச்சியடைந்த அசின், எந்த படங்களிலும் நடிக்காமல் வீடேகதியென்று கிடந்தார். இப்படியே, ஒரு ஆண்டு கழிந்து விட்ட நிலையில், இப்போது மீண்டும் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். தற்போது,இந்தியில் ஒரு வாய்ப்பு, அவருக்கு கிடைத்துள்ளதாம். இந்தி மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கிலும், தொடர்ந்து நடிப்பது என்ற முடிவுக்கும் வந்துள்ளாராம், அசின்.