மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு | சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா | ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் | என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா |
தில்லு முல்லு படத்தை தடை செய்ய கோரி விசு தாக்கல் செய்த மனுவை நீதிபதி நிராகரித்தார். இதனால் படம் எவ்வித பிரச்னையும் இல்லாமல் ரிலீஸ் ஆக இருக்கிறது. பாலசந்தர் இயக்கத்தில், ரஜினி நடிப்பில், 1981-ம் ஆண்டு வெளிவந்த சூப்பர்-டூப்பர் ஹிட் காமெடி படம் "தில்லு முல்லு". இப்படத்திற்கு நடிகரும், இயக்குனருமான விசு திரைக்கதை, வசனம் எழுதி இருந்தார். இப்படம் அதேபெயரில் இப்போது ரீ-மேக் ஆகியுள்ளது. மர்ச்சி சிவா ரஜினி ரோலிலும், மாதவி ரோலில், இஷா தல்வாரும் நடிக்கின்றனர். பத்ரி இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் நாளை(ஜூன் 14ம் தேதி) ரிலீஸ் ஆக உள்ளது.
இந்நிலையில் தில்லு முல்லு படத்தை தடை செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் விசு வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், , தில்லு முல்லு படத்துக்கு நான் தான் திரைக்கதை, வசனம் எழுதியுள்ளேன். தற்போது அந்த படத்தை "தில்லு முல்லு 2" என்ற பெயரில் உருவாகியுள்ளது. இதற்கு என்னிடம் அனுமதி கேட்கவில்லை. எனவே "தில்லு முல்லு 2" படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று அதில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சுதாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது வேந்தர் மூவிஸ் சார்பில் இவ்வழக்கில் ஆஜரான வக்கீல் நடராஜன் கூறுகையில், தில்லு முல்லு படத்தை தயாரித்த நிறுவனத்துக்கு உரிய பணத்தை கொடுத்து அவர்களின் ஒப்புதல் பேரில் தான் இப்படத்தை இயக்கியுள்ளனர். மேலும் விசுவின் திரைக்கதை மற்றும் வசனத்தை இப்படத்தில் பயன்படுத்தவில்லை என்றார். இதனை ஏற்ற நீதிபதி படம் நாளை ரிலீஸ் ஆவதற்கு எந்த தடையும் இல்லை என்றார். மேலும் இதுதொடர்பாக வழக்கு விசாரணையை அடுத்த மாதம் ஜூலை 5ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.