மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு | சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா | ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் | என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா |
கும்கி பட நாயகன் விக்ரம் பிரபு, இவன் வேற மாதிரி, சிகரம் தொடு படங்களை முடித்து விட்டார். கும்கி ரிசல்ட்டை பார்த்து விட்டு புதிய படங்களில் கமிட்டானவர், இப்போது படங்களில் நடித்து முடித்த கையோடு தனது நான்காவது படமான அரிமா நம்பியில் இறங்கி விட்டார். இரண்டாவது படமான இவன் வேற மாதிரியில் ஆக்சன் கோதாவில் இறங்கிய அவர், இந்த புதிய படத்தில் பர்மாமென்ஸ் ரீதியாகவும் கலக்கப்போகிறாராம். அதற்காக கெட்டப் சேஞ்ச், பாடிலாங்குவேஜ் என தன்னை மேலும் மெருகேற்றியிருக்கிறார் விக்ரம்பிரபு.
தற்போது அரிமா நம்பி படப்பிடிப்பும் தொடங்கி விட்டது. முன்னதாக, இப்படத்தின் தயாரிப்பாளரான எஸ்.தாணு, விக்ரம் பிரபு தனது படத்துக்கு கமிட்டானபிறகு, ஒருநாள் ஆடி காருடன் அவரது வீட்டுக்கு சென்று அதை கிப்டாக கொடுத்தாராம். சினிமாவில் நடிக்க வந்த பிறகு தனக்கு கிடைத்த முதல் பரிசு என்பதால் இன்ப அதிர்ச்சியடைந்தாராம் விக்ரம்பிரபு. அதோடு, என் வீட்டில் எத்தனையோ ரக கார்கள் இருந்தாலும், நீங்கள் அன்பாக கொடுத்த இந்த கார் என்னைப்பொறுத்தவரை எப்போதுமே ரொம்ப உயர்வானதுதான் என்றாராம் நடிகர்.