மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு | சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா | ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் | என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா |
தமிழ் சினிமாவில் மலையாள நடிகைகளின் ஆதிக்கமே அதிகமாக இருந்து வருகிறது என்றாலும், அவ்வப்போது தெலுங்கு, கன்னட சினிமாக்களில் இருந்தும் நடிகைகள் வருவதுண்டு. அப்படி சிவகார்த்திகேயன் நடித்துள்ள வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்காக வந்திருக்கும் புதுமுக நடிகைதான் ஸ்ரீதிவ்யா. இவருக்கு தமிழில் ஒரு வார்த்தைகூட பேச தெரியாதாம். ஆனபோதும், தனது கிராமிய கதைக்கு பொருத்தமாக இருப்பார் என்று புக் பண்ணியிருக்கிறார் பட இயக்குனர் பொன்ராம்.
ஆனால், அவருக்கு தெலுங்கு ஒரு வார்த்தைகூட தெரியாதாம். அதனால் ஸ்பாட்டில் தமிழ் டயலாக்குகளை ஸ்ரீதிவ்யாவுக்கு சொல்லிக்கொடுத்து நடிப்பை வாங்க ரொம்ப கஷ்டப்பட்டாராம். இதைப்பார்த்த பட நாயகன் சிவகார்த்திகேயன், தன்னுடன் ஸ்ரீதிவ்யா நடிக்கும் காட்சிகளின் டயலாக் பேப்பர்களை டைரக்டரிடமிருந்து வாங்கி, தானே அவருக்கு தமிழை புரிய வைத்தாராம். இதனால், வார்த்தைகளின் அர்த்தத்தை புரிந்து கொண்டு சிறப்பாக நடித்தாராம் நடிகை.
இதனால் சந்தோசமடைந்த இயக்குனர், அதன்பிறகு ஸ்ரீதிவ்யாவுக்கு தமிழ் கற்றுக்கொடுக்கும் பொறுப்பினை சிவகார்த்திகேயனிடமே விட்டு விட்டாராம். அதனால், இருவரும் டயலாக் பேப்பரை வாங்கிய கையோடு அடிக்கடி எஸ்கேப்பாகி விடுவார்களாம். எங்கே ஆளை காணோம் என்று தேடிப்பார்த்தால், எங்காவது ஒரு மறைவிடத்தில் அமர்ந்து சீரியசாக நடிகைக்கு தமிழை போதித்துக்கொண்டிருப்பாராம் சிவகார்த்திகேயன்.
ஆக, சிவகார்த்திகேயன் புண்ணியத்தில் ஓரளவு தமிழ் பயின்று விட்டதாக அப்படத்தின் பர்ஸ்ட்லுக் விழாவில் தெரிவித்த ஸ்ரீதிவ்யா, அடுத்த படத்தில் நடிக்கும்போது நன்றாக தமிழ் பேசி விடுவேன் என்று நம்பிக்கையோடு கொஞ்சம் கொஞ்சம் தமிழில் கொஞ்சி கொஞ்சி பேசினார்.