மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு | சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா | ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் | என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா |
லேசா லேசா படத்தில் அறிமுகமான த்ரிஷா, அதன்பிறகு நடித்த படங்களில் அதிக ஈடுபாடு காட்டினார். முக்கியமாக தொழிலை தெய்வமாக மதித்தார் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு ஸ்பாட்டுக்கு சரியான நேரத்தில் ஆஜராகி விடுவார். டைரக்டராக பேக்அப் சொல்கிற வரை எக்காரணம் கொண்டும் ஸ்பாட்டை விட்டு வெளியேற மாட்டார். மேலும், கால்சீட் விசயத்திலும் ஒரு சின்ன குளறுபடிகூட த்ரிஷாவிடம் இருக்காது. இதனால், சினிமா வட்டாரங்களில் த்ரிஷாவுக்கு ரொம்ப நல்ல பெயர் இருந்து வந்தது.
ஆனால், சமீபகாலமாக அவரது நடவடிக்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். தற்போது ஜெயம் ரவியுடன் பூலோகம், ஜீவாவுடன் என்றென்றும் புன்னகை மற்றும் ரம் உள்பட சில படங்களில் நடித்து வரும் த்ரிஷா, குறித்த நேரத்தில் ஸ்பாட்டுக்கு வருவதே இல்லையாம். இவருக்காக யூனிட்டே காத்திருக்க வேண்டியுள்ளதாம்.
அப்படியே ஸ்பாட்டுக்கு வந்து விட்டாலும், கேமரா முன்பு நின்று கொண்டே செல்போனில் பேசுகிறாராம். டேக் ரெடியாகி விட்டது என்பது தெரிந்தும் தொழில் சின்சியாரிட்டி இல்லாமல் நடந்து கொள்கிறாராம். அதோடு, அடிக்கடி பெர்மிஷன் வாங்கிக்கொண்டு எஸ்கேப் ஆகி விடுகிறாராம். த்ரிஷாவின் இந்த செயல் அவரை வைத்து படம் தயாரித்து வரும் படாதிபதிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.