மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு | சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா | ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் | என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா |
தமிழ் சினிமாவில் சமீபகாலமாக முன்னணி இயக்குனர்களின் மெகா பட்ஜெட் படங்களை விட, குறைந்த பட்ஜெட்டில் தயாராகும் புதுமுக இயக்குனர்களின் படங்கள்தான் அதிக வசூலை குவித்து வருகின்றன. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா, சூதுகவ்வும், எதிர்நீச்சல் என்ற பல படங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
இந்த படங்களெல்லாம் ஸ்டார் வேல்யூ இல்லாத புதுவரவு இயக்குனர்களின் படங்கள்தான். அதோடு பட்ஜெட் படங்கள். அதன்காரணமாக, இப்போது மேல்தட்டு ஹீரோக்களின் கவனம்கூட இந்த படங்களை இயக்கியவர்களின் மீது திரும்பியிருக்கிறது. ஆனால், முன்னணி ஹீரோயினிகள் என்று சொல்லப்படும் நடிகைகள் அப்படியல்ல. பிரமாண்ட படங்கள், முன்னணி ஹீரோக்களின் படங்கள் என்றால் தங்களது படக்கூலி எகிறும் என்று மட்டும் நினைப்பவர்கள், வளர்ந்து வரும் இயக்குனர்கள் கால்சீட் கேட்டால் செவிசாயப்பதே இல்லை.
இதில் காஜல்அகர்வால் முதல் இடத்தில் இருக்கிறாராம். வளர்ந்து வரும் நடிகர்களை வைத்து ஓரிரு ஹிட் கொடுத்த இயக்குனர்கள் தங்கள் படங்களில் நடிக்க கால்சீட் கேட்டால், முதலில் அவர்களின் பயோடேட்டாவை அனுப்ப சொல்கிறாராம். அனுப்பிய பிறகு நீங்கள் பெரிய ஹீரோக்கள் யாரையும் இயக்கவில்லையே என்று சொல்லி, நான் இப்போது முன்னணி நடிகை அதனால் முன்னணி இயக்குனர், ஹீரோக்களுடன் நடித்தால் மட்டுமே எனது மார்க்கெட் நிலையாக இருக்கும். ஹிட் கொடுத்த டைரக்டர் என்று ஒரு படத்தில் இறங்கினால் அதன்பிறகு மீண்டும் மேலே ஏற முடியாது. என்னை இரண்டாம்தட்டு நடிகையாக்கி விடுவார்கள். அதையடுத்து எனது மார்க்கெட்டும் டவுனாகி விடும் என்றும் தன்பக்கமுள்ள நியாயத்தை எடுத்து வைக்கிறாராம் காஜல்.