மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு | சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா | ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் | என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா |
விஸ்வரூபம் படத்தை இயக்கி வந்தபோது தன்னைப்பற்றிய செய்திகள் உடனுக்குடன் வெளியானபோது சந்தோசமடைந்து வந்த கமல், தற்போது வஸ்வரூபம்-2 மற்றும் அதற்கடுத்து தான் இயக்கப்போகும் படங்கள் பற்றிய செய்திகளை மீடியாக்கள் பரபரப்பாக வெளியிட்டு வருவதால் டென்சனாகி உள்ளாராம்.
குறிப்பாக, திருப்பதி பிரதர்ஸ்க்காக தான் இயக்கும் காமெடி படம் பற்றிய செய்தியை லிங்குசாமியே அறிவித்து விட்ட நிலையில், அந்த படத்தில் காஜல் அகர்வால், திவ்யா ஸ்பந்தா உள்ளிட்ட நடிகைகளை நடிக்க வைக்கும் முயற்சி நடப்பது வெளியாகி வருவதால், இந்த செய்திகள் எப்படி வெளியாகிறது என்று தனது உதவியாளர்களிடம் சாடுகிறாராம்.
இப்படி அவர் கோபத்தை காட்டி வந்த நேரத்தில் தற்போது அப்படத்துக்கு உத்தம வில்லன் என்ற பெயர் வைத்திருப்பதையும் மீடியாக்கள் கண்டுபிடித்து தலைப்பு செய்தியாக வாசித்து விட கமலின் கோபம் இன்னும் உச்சத்துக்கு சென்றுள்ளதாம். இதையடுத்து, இனிமேல் நான் இயக்கும் படங்கள் பற்றிய செய்திகளை எனக்குத் தெரியாமல் யாரும் வெளியில் மூச்சு விடக்கூடாது என்று தன்னை சுற்றியிருப்பவர்களிடம் ஆர்டர் போட்டுள்ளாராம் கமல்.