ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
கடந்தாண்டு நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், வலது கால் முழுவதும் தெரியும் வகையில், உடையணிந்து வந்து, விழாவுக்கு வந்திருந்த ஒட்டு மொத்த பார்வையாளர்களின் கவனத்தையும் ஈர்த்தார், பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி.அவரின் இந்த போஸ்,"ஏஞ்சலினா ரைட் லெக் என, உலகம் முழுவதும் பிரபலமானது. இதைத் தொடர்ந்து, ஹாலிவுட் பிரபலங்களும், இதேபோல், "ரைட் லெக் போஸ் கொடுத்தனர். ஆனால், பெரிய அளவில் எடுபடவில்லை.இந்த விவகாரம், இப்போது தான், இலியானாவின் கவனத்துக்கு வந்துள்ளது போலும். சமீபத்தில், மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், வலது கால் முழுவதும் தெரியும் வகையிலான, உடையை அணிந்து வந்து, ஒய்யார நடை போட்டு, அங்கு வந்திருந்தவர்களை திக்கு முக்காடச் செய்தார். "ஹாலிவுட்டில், ஏஞ்சலினாவால், இப்படி போஸ் கொடுக்க முடியும்போது, பாலிவுட்டில், இலியானாவால், போஸ் கொடுக்க முடியாதா என்ன என, சவால் விடும் வகையில் பேசினாராம்.