லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! | 48 வயதில் கன்றாவியான ரிலேஷன்ஷிப் : மீண்டும் ஒரு ஏமாற்றத்தில் புலம்பிய சுசித்ரா | ‛கோர்ட்' பட ரீமேக்கில் இணையும் அடுத்த பிரபலங்கள் | கதை நாயகன் அவதாரத்திற்கு தயாராகி வரும் பால சரவணன்! | நான் இந்திய சினிமாவின் ரசிகன்: ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் | ஐடி ஊழியர் கடத்தி, தாக்குதல் : நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு | 25 ஆண்டுகளுக்குபின் வடிவேலு, பிரபுதேவா கூட்டணி: முன்னே மாதிரி வொர்க் அவுட் ஆகுமா? | 'வீரவணக்கம்' பட புரமோஷனில் கலந்துகொள்ளாத சமுத்திரக்கனி |
சிம்பு, தனுஷ் என்று இளம் நடிகர்கள் போட்டி போட்டு, இசை ஆல்பங்கள் வெளியிடும் காலமிது. இந்த நேரத்தில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும், இசை ஆல்பம் வெளியிடும் வேலைகளில் இறங்கியுள்ளார். இந்த ஆல்பம், "எதிர்கால இந்தியா, இளைஞர்களின் கையில் என்ற, கருத்தின் அடிப்படையில் உருவாகிறதாம். மேலும், இந்த ஆல்பத்தில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை நடிக்க வைத்தால் சிறப்பாக இருக்கும் என்று, அவரிடம் கேட்டனராம். அவரும் ஒப்புதல் கொடுத்துவிட்டாராம். இதனால், மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் யுவன், இந்த ஆல்பத்தை ரகுமானின் "வந்தே மாதரம் போல், பிரபல படுத்தவேண்டும் என்று முழுவீச்சில் இறங்கியுள்ளார்.