லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! | 48 வயதில் கன்றாவியான ரிலேஷன்ஷிப் : மீண்டும் ஒரு ஏமாற்றத்தில் புலம்பிய சுசித்ரா | ‛கோர்ட்' பட ரீமேக்கில் இணையும் அடுத்த பிரபலங்கள் | கதை நாயகன் அவதாரத்திற்கு தயாராகி வரும் பால சரவணன்! | நான் இந்திய சினிமாவின் ரசிகன்: ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் | ஐடி ஊழியர் கடத்தி, தாக்குதல் : நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு | 25 ஆண்டுகளுக்குபின் வடிவேலு, பிரபுதேவா கூட்டணி: முன்னே மாதிரி வொர்க் அவுட் ஆகுமா? | 'வீரவணக்கம்' பட புரமோஷனில் கலந்துகொள்ளாத சமுத்திரக்கனி |
நடிகை ஹன்சிகா ஏற்கனவே மார்பக புற்று நோய் தூதராக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், தற்போது சமந்தாவும் கருப்பை புற்றுநோய் பிரசாரம் செய்து வருகிறார். இதுபற்றி சமந்தா கூறுகையில், இந்தியாவில் வருடந்தோறும் 80 ஆயிரம் பெண்கள் கருப்பை புற்றுநோயால் இறக்கின்றனர். ஆனால் இந்த நோயை ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்தால் பூரண குணமடைந்து விடலாம். அரசும் இதுபற்றிய விழிப்புணர்ச்சியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது.
மேலும், இதுபோன்ற நோய்கள் நம்மை நெருங்காமல் இருக்க முன்கூட்டியே தடுப்பூசிகளை போட்டுக்கொண்டால் இன்னும் பாதுகாப்பு கிடைக்கும் என்பதால், சமீபத்தில் நானும் கருப்பை மற்றும் வாய்ப்புற்று நோய்க்கான தடுப்பூசியை போட்டுக்கொண்டேன். இதை எல்லா பெண்களுமே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போட்டுக்கொண்டால் புற்று நோய் பாதிப்பில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார் சமந்தா.
மேலும், தற்போது சினிமாவில் பிசியாக நடித்து வந்தாலும், இதுபோன்ற விழிப்புணர்ச்சி பிரச்சாரங்களிலும் தன்னை ஈடுபடுத்தி வருவதாக சொல்லும் சமந்தா, குறிப்பாக இளவட்ட பெண்கள் மத்தியில் தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளாராம்.