லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! | 48 வயதில் கன்றாவியான ரிலேஷன்ஷிப் : மீண்டும் ஒரு ஏமாற்றத்தில் புலம்பிய சுசித்ரா | ‛கோர்ட்' பட ரீமேக்கில் இணையும் அடுத்த பிரபலங்கள் | கதை நாயகன் அவதாரத்திற்கு தயாராகி வரும் பால சரவணன்! | நான் இந்திய சினிமாவின் ரசிகன்: ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் | ஐடி ஊழியர் கடத்தி, தாக்குதல் : நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு | 25 ஆண்டுகளுக்குபின் வடிவேலு, பிரபுதேவா கூட்டணி: முன்னே மாதிரி வொர்க் அவுட் ஆகுமா? | 'வீரவணக்கம்' பட புரமோஷனில் கலந்துகொள்ளாத சமுத்திரக்கனி |
ஜாக்கிசான் நடித்த 25 படங்களை இந்தியாவில் வெளியிட்ட நிறுவனம் ஆஸ்கர் பிலிம்ஸ். அந்த வகையில் இந்திய ரசிகர்களுக்கு ஜாக்கிசானை அடையாளம் காட்டிய பெருமை ஆஸ்கர் பிலிம்சையே சாரும். அதனால் அந்நிறுவனம் தமிழில் தயாரித்த தசாவதாரம் படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொள்ள முதன்முறையாக சென்னை வந்திருந்தார் ஜாக்கிசான். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அந்த விழாவில் அப்போது தமிழகத்தில் முதல்வராக இருந்த கருணாநிதி, ரஜினி, கமல் உள்பட இந்திய திரையுலகின் பல பிரபல நடிகர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், ஜூலை மாதம் டெல்லியில் நடைபெறவிருக்கும் சீன திரைப்பட விழாவுக்காக மீண்டும் இந்தியா வருகிறார் ஜாக்கிசான். 6 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் கலந்து கொள்ள சீனாவில் இருந்து ஜாக்கிசான் மற்றும் முக்கிய பிரபலங்கள் வரும் 18ந்-தேதி டெல்லிக்கு வருகின்றனர்.
இவ்விழாவில் ஜாக்கிசான் இயக்கி நடித்துள்ள சைனீஸ் ஜோடியாக் என்ற படமும் திரையிடப்படுகிறதாம்.
ஜாக்கிசானின் இந்திய வருகையையொட்டி ரசிகர்களின் உற்சாகத்தினால் இப்போதே டெல்லி களை கட்டியுள்ளாதாம்.