லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! | 48 வயதில் கன்றாவியான ரிலேஷன்ஷிப் : மீண்டும் ஒரு ஏமாற்றத்தில் புலம்பிய சுசித்ரா | ‛கோர்ட்' பட ரீமேக்கில் இணையும் அடுத்த பிரபலங்கள் | கதை நாயகன் அவதாரத்திற்கு தயாராகி வரும் பால சரவணன்! | நான் இந்திய சினிமாவின் ரசிகன்: ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் | ஐடி ஊழியர் கடத்தி, தாக்குதல் : நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு | 25 ஆண்டுகளுக்குபின் வடிவேலு, பிரபுதேவா கூட்டணி: முன்னே மாதிரி வொர்க் அவுட் ஆகுமா? | 'வீரவணக்கம்' பட புரமோஷனில் கலந்துகொள்ளாத சமுத்திரக்கனி |
சினிமாவில் சின்ன குழந்தையாக நடிக்கத் தொடங்கிய சிம்பு, இப்போது ஹீரோ, இயக்குனர், பாடகர் என பன்முகம் காட்டி வளர்ந்து நிற்கிறார். ஆனால் அவர் ஹீரோவான பிறகு நயன்தாராவின் காதலில் விழுந்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால், அதையடுதது அமைதியாக நடிப்பதில் மட்டுமே கவனத்தை பதித்து வருகிறார்.
இந்த நிலையில், இத்தனை காலமும் சினிமாவில் தான் நடித்து சம்பாதித்த பணத்தில் சென்னை தி.நகரில் ஒரு பிரமாண்ட பங்களாவை கட்டி வந்தார் சிம்பு. அந்த கிரகப்பிரவேசத்திற்கு தனது திரையுலக அபிமானிகள் பலருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அதில் தற்போது சிம்புவுடன் வாலு, வேட்டை மன்னன் படங்களில் நடித்து வரும் ஹன்சிகா ஸ்பெசலாம்.
இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கத் தொடங்கியதில் இருந்தே அவர்களுக்கிடையே காதல் உருவாகியிருப்பதாக செய்திகள் பரவின, என்றபோதும் அதை அவர்கள் செவி கொடுத்து கேட்கவில்லை. அதனால் கிசுகிசு சீக்கிரமே பிசுபிசுத்துப்போனது. அதையடுத்து இப்போது சிம்பு வீட்டு கிரகப்பிரவேசத்துக்கு ஹன்சிகா ஸ்பெசல் கெஸ்ட்டாக செல்வதால் மீண்டும், கிசுகிசு உயிர் பெற்றுள்ளது.
வந்தாள் மகாலட்சுமியே என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே -என்று சிம்பு பாடுவாரா என்ன? அதையும்தான் பார்க்கலாமே.