லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! | 48 வயதில் கன்றாவியான ரிலேஷன்ஷிப் : மீண்டும் ஒரு ஏமாற்றத்தில் புலம்பிய சுசித்ரா | ‛கோர்ட்' பட ரீமேக்கில் இணையும் அடுத்த பிரபலங்கள் | கதை நாயகன் அவதாரத்திற்கு தயாராகி வரும் பால சரவணன்! | நான் இந்திய சினிமாவின் ரசிகன்: ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் | ஐடி ஊழியர் கடத்தி, தாக்குதல் : நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு | 25 ஆண்டுகளுக்குபின் வடிவேலு, பிரபுதேவா கூட்டணி: முன்னே மாதிரி வொர்க் அவுட் ஆகுமா? | 'வீரவணக்கம்' பட புரமோஷனில் கலந்துகொள்ளாத சமுத்திரக்கனி |
ஆந்திர சினிமாவின் முன்னணி நடிகர்களில் அல்லுஅர்ஜூனும் ஒருவர். இவர் நடித்த இத்தரம்மாயிலது என்ற படம் இப்போது வெளியாகி சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்த சந்தோசத்தை கொண்டாடும் நிலையில் இல்லை அல்லு அர்ஜூன். காரணம், அவருக்கும், அவரது மனைவிக்கும் விவாகரத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாம்.
அல்லு அர்ஜூனுக்கும், சினேகா ரெட்டி என்பவருக்கும் கடந்த 2011ம் ஆண்டுதான் திருமணம் நடந்தது. இரண்டு ஆண்டுகள் சந்தோசமாக வாழ்ந்த அவர்களது குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட சிறு சிறு சலசலப்புகளே இப்போது விஸ்வரூபமெடுத்து விவாகரத்துவரை சென்று நிற்கிறதாம். இதனால் சில மாதங்களாகவே இருவரும் பிரிந்தே வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கான காரணம் பற்றி விசாரிக்கையில், தன்னுடன் நடிக்கும் பல நடிகைகளுடன் அல்லு அர்ஜூனின் நட்பு இருந்து வருகிறதாம். சில சமயங்களில் வீடு வரைக்கும் அவர்களை வரவைத்து விருந்து கொடுப்பாராம். இது அவரது மனைவிக்கு அது பிடிக்கவில்லையாம். இதனால் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினை, இப்போது பெரிய அளவில் வெடித்து நிற்கிறதாம். இதனால் பிரிந்து வாழும் அவர்கள் விரைவில் விவாகரத்து செய்து விட்டு நிரந்தரமாக பிரிய முடிவெடுத்திருக்கிறார்களாம்.
இந்த விவாகரத்து செய்தியை இன்னமும் சம்பந்தப்பட்டவர்கள் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், ஆந்திர படவுலகில் இப்போது ஹாட் டாபிக்கே இந்த செய்திதான்.