லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! | 48 வயதில் கன்றாவியான ரிலேஷன்ஷிப் : மீண்டும் ஒரு ஏமாற்றத்தில் புலம்பிய சுசித்ரா | ‛கோர்ட்' பட ரீமேக்கில் இணையும் அடுத்த பிரபலங்கள் | கதை நாயகன் அவதாரத்திற்கு தயாராகி வரும் பால சரவணன்! | நான் இந்திய சினிமாவின் ரசிகன்: ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் | ஐடி ஊழியர் கடத்தி, தாக்குதல் : நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு | 25 ஆண்டுகளுக்குபின் வடிவேலு, பிரபுதேவா கூட்டணி: முன்னே மாதிரி வொர்க் அவுட் ஆகுமா? | 'வீரவணக்கம்' பட புரமோஷனில் கலந்துகொள்ளாத சமுத்திரக்கனி |
மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக சினிமாவிற்குள் வந்தவர் சித்தார்த். அதையடுத்து ஷங்கரின் பாய்ஸ் படத்தில் கதாநாயகன் ஆனார். அதனால் தனது உதவி இயக்குனர் ஆசையை அப்படியே டீலில் விட்டுவிட்டார். எப்போது படம் இயக்கப்போகிறீர்கள் என்று கேட்டால், என்னை நானே இயக்கிக்கொள்வதற்கான நேரம் இன்னமும் வரவில்லை என்கிறார் சித்தார்த்.
அதேசமயம், காதலில் சொதப்புவது எப்படி படத்தில் தானும் ஒரு பார்ட்னராக அப்படத்தை தயாரித்த அவர், அடுத்து இரண்டு படங்களை தயாரிக்கிறார். அப்படங்களை இயக்குனர்கள் வசந்தபாலன், கார்த்திக் சுப்பராஜ் ஆகிய இருவரும் இயக்குகிறார்களாம். அந்த படங்களில் நானே ஹீரோவாகவும் நடிக்கிறேன் என்று சொல்லும் சித்தார்த், இந்த படங்களில் நான் தயாரிப்பாளராகவும் இறங்குவதற்கு காரணம், கதைகளின் மீது ஏற்பட்ட நம்பிக்கைதான். இப்படங்கள் எனக்கு தமிழில் ஒரு நிலையான ஹீரோ அந்தஸ்தை ஏற்படுத்தித் தரும் என்று தான் உறுதியாக நம்புவதாகவும் சொல்கிறார்.
ஆக, கமல், தனுஷ், விஷாலைத் தொடர்ந்து சித்தார்த்தும் தயாரிப்பாளர் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.