லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! | 48 வயதில் கன்றாவியான ரிலேஷன்ஷிப் : மீண்டும் ஒரு ஏமாற்றத்தில் புலம்பிய சுசித்ரா | ‛கோர்ட்' பட ரீமேக்கில் இணையும் அடுத்த பிரபலங்கள் | கதை நாயகன் அவதாரத்திற்கு தயாராகி வரும் பால சரவணன்! | நான் இந்திய சினிமாவின் ரசிகன்: ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் | ஐடி ஊழியர் கடத்தி, தாக்குதல் : நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு | 25 ஆண்டுகளுக்குபின் வடிவேலு, பிரபுதேவா கூட்டணி: முன்னே மாதிரி வொர்க் அவுட் ஆகுமா? | 'வீரவணக்கம்' பட புரமோஷனில் கலந்துகொள்ளாத சமுத்திரக்கனி |
சினிமாத்துறையில் அதிக வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பவர்கள் யார் என்றால் அது உதவி இயக்குனர்கள்தான். பெப்சியில் இடம்பெற்ற உறுப்பினர்கள் ஒரு படத்துக்கு வேலைக்கு சென்றால், அவர்களுக்கு யூனியன் நிர்ணயித்த சம்பளத்தை கொடுத்தாக வேண்டும். ஆனால், உதவி இயக்குனர்கள் விசயத்தில் அப்படியில்லை. ஒரு படத்துக்கு இவ்வளவு சம்பளம் என்று பேசுவார்கள். அதையும் கொடுத்தால்தான் உண்டு. நான் இயக்குனர் சங்கத்தில் இருக்கிறேன் என்று கறாராக பேசினால், சட்டம் பேசுறான் நமக்கு செட்டாக மாட்டான் என்று படத்திலிருந்தே வெளியேற்றி விடுவார்கள்.
அதனால் பெரும்பாலான உதவி இயக்குனர்கள் வாயை திறப்பதே இல்லை. அதன் காரணமாகவே பசி, பட்டினி என்று அதிகமாக கஷ்டப்பட்டு வருகிறார்கள். இது இன்றைக்கு இயக்குனராக இருக்கும் பலரும் அனுபவித்த கொடுமைதான்.
அதனால்தானோ என்னவோ, தற்போது இயக்குனர் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள இயக்குனர் விக்ரமன், தனது முதல் அறிவிப்பாக உதவி இயக்குனர்களுக்கு ஊதிய உயர்வு பெற்றுத்தருவதுதான் எனது முதல் வேலை என்று அறிவித்திருக்கிறார். அதுமட்டுமின்றி, சங்கத்துக்கு 5டி கேமரா வாங்க முடிவெடுத்துள்ள அவர், அதை உதவி இயக்குனர்கள் தாங்கள் இயக்கும் குறும் படங்களுக்கு கட்டணம் இன்றியே பயன்படுத்திக்கொள்ளலாம் என்றொரு புதிய சலுகையினையும அறிவித்திருக்கிறார். அப்படி அவர்கள் இயக்கிய படங்களை, தயாரிப்பாளர்களுக்கு போட்டு காண்பிக்கவும் இயக்குனர் சங்கம் சார்பிலே வசதி வாய்ப்பும் செய்து தரப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
விக்ரமனின் இந்த அதிரடி சலுகை அறிவிப்பினால், உதவி இயக்குனர்கள் உற்சாகத்தில் காணப்படுகின்றனர்.