லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! | 48 வயதில் கன்றாவியான ரிலேஷன்ஷிப் : மீண்டும் ஒரு ஏமாற்றத்தில் புலம்பிய சுசித்ரா | ‛கோர்ட்' பட ரீமேக்கில் இணையும் அடுத்த பிரபலங்கள் | கதை நாயகன் அவதாரத்திற்கு தயாராகி வரும் பால சரவணன்! | நான் இந்திய சினிமாவின் ரசிகன்: ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் | ஐடி ஊழியர் கடத்தி, தாக்குதல் : நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு | 25 ஆண்டுகளுக்குபின் வடிவேலு, பிரபுதேவா கூட்டணி: முன்னே மாதிரி வொர்க் அவுட் ஆகுமா? | 'வீரவணக்கம்' பட புரமோஷனில் கலந்துகொள்ளாத சமுத்திரக்கனி |
20 வருடங்களுக்கு முன்பு அர்ஜூன் இயக்கி நடித்த படம் ஜெய்ஹிந்த். அப்படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது தானே தயாரித்து இயக்கி நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் அர்ஜூன். முந்தைய படத்தில் இருந்து இது முற்றிலும் மாறுபட்ட கதை என்று சொல்லும் அவர், பழைய கதையின் தொடர்ச்சி இல்லை என்று உறுதியாக சொல்கிறார். மேலும், இப்படத்தை சுமார் 20 கோடி பட்ஜெட்டில் படமாக்கப்போவதாக சொல்லும் அர்ஜூன், இந்தியாவில் சில பகுதிகளில் மட்டும் படப்பிடிப்பு நடத்தி விட்டு பெரும்பகுதி படப்பிடிப்பை லண்டனில் தான் நடத்தப்போகிறாராம்.
மேலும், முதல் பதிப்பில் தனக்கு ஜோடியாக ரஞ்சிதாவை நடிக்க வைத்தவர், இந்த முறை மூன்றுபேர் மூன்று காதல் படத்தில் தனக்கு ஜோடியாக நீச்சல் வீராங்கணையாக நடித்த சுர்வின் சாவ்லாவை இப்படத்தின் நாயகியாக்கியுள்ளார். மேலும், முதல் பதிப்பில் முக்கிய காமெடியனாக நடித்த கவுண்டமணியை இந்த பதிப்பில் நடிக்க வைக்கவில்லையாம். ஆனால், அவருடன் நடித்த இன்னொரு காமெடியனான செந்திலை இந்தமுறை நடிக்க வைத்துள்ள அர்ஜூன், கவுண்டமணி நடித்த வேடத்துக்கு தெலுங்கு நடிகர் பிரேமானந்தம் என்பவரை புக் பண்ணியிருக்கிறாராம்.
கவுண்டமணி இப்போதும் நடித்துக்கொண்டுதானே இருக்கிறார். பிறகு எதற்காக அவரை கழட்டி விட்டீர்கள்? என்று அவரைக்கேட்டால், காமெடியில் பழைய சாயலில் தெரிந்து விடக்கூடாது என்பதினால்தான் என்று ஒரு பொருந்தாத பதிலை தருகிறார் அர்ஜூன். அப்படியென்றால் அவரது ஆக்சனில் மட்டும் பழைய சாயல் இருக்காதா என்ன?