லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! | 48 வயதில் கன்றாவியான ரிலேஷன்ஷிப் : மீண்டும் ஒரு ஏமாற்றத்தில் புலம்பிய சுசித்ரா | ‛கோர்ட்' பட ரீமேக்கில் இணையும் அடுத்த பிரபலங்கள் | கதை நாயகன் அவதாரத்திற்கு தயாராகி வரும் பால சரவணன்! | நான் இந்திய சினிமாவின் ரசிகன்: ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் | ஐடி ஊழியர் கடத்தி, தாக்குதல் : நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு | 25 ஆண்டுகளுக்குபின் வடிவேலு, பிரபுதேவா கூட்டணி: முன்னே மாதிரி வொர்க் அவுட் ஆகுமா? | 'வீரவணக்கம்' பட புரமோஷனில் கலந்துகொள்ளாத சமுத்திரக்கனி |
"வெப்பம், 180 ஆகிய தமிழ் படங்களில் நடித்த நித்யா மேனன், தெலுங்கு, மலையாளத்தில் மிகவும் பிசியான நடிகை. "உயரம் குறைவு, செக்ஸ் அப்பீல் இல்லை என, அவர் மீது, விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், அவரின் கால்ஷீட்டுக்காக, தெலுங்கு, மலையாள திரைப்பட தயாரிப்பாளர்கள், வரிசை கட்டி நிற்கின்றனர். இதனால், தன் மீதான, விமர்சனங்களை, அவர் பொருட்படுத்துவது இல்லை. இந்நிலையில், "தெலுங்கில், முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்க வேண்டுமானால், கவர்ச்சியில் தாராளம் காட்ட வேண்டும் என, அவருக்கு, யாராவது, தூபம் போட்டால், அவர்களை எரித்து விடுவது போல் பார்க்கிறாராம், நித்யா. "உடை குறைப்பு விஷயங்கள் எல்லாம், எனக்கு ஒத்து வராது. அப்படி நடிக்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் மட்டுமே நடிப்பேன் என, சூடாக பதில் அளிக்கிறார், நித்யா மேனன்.