சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி | பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு மரியாதை இல்லையா : பிரியாமணி பதில் | 'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் |
நடிகர் ரஜினிகாந்தை பற்றி டுவிட்டரில் நேற்று இரவு வெளியான ஒரு செய்தி கோலிவுட்டை பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது. அதாவது நடிகர் ரஜினிகாந்திற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று டுவிட்டரில் செய்தி வெளியானது. மேலும் இந்த செய்தி விண்ணைத்தாண்டி வருவாயா, வானம் உள்ளிட்ட படங்களில் நடித்து வி.டி.வி.கணேஷ் பெயரில் வெளியானது. இதனால் ஏராளமான பத்திரிக்கையாளர்களும், ரசிகர்களும் ரஜினி அலுவலகம் மற்றும் அவரது வீடுகளில் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர். ஆனால் அவர் நலமுடன் இருப்பதாகவும், அவரைப்பற்றி தவறாக செய்திகள் வெளியாகி இருப்பதாகவும் ரஜினி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அது வெறும் வதந்தி தான் தெரியவந்தது.
இதனிடையே வி.டி.வி.கணேஷ் பெயரில் இருந்து டுவிட்டர் செய்தி வெளியானதால் ரஜினி ரசிகர்கள் பலர் அவர் மீது கோபமாக உள்ளனர். ஆனால் தான் அப்படி ஒரு செய்தியை வெளியிடவே இல்லை என கணேஷ் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, என் பெயரில் யாரோ போலியாக டுவிட்டரில் இச்செய்தியை வெளியிட்டுள்ளனர். நான் டுவிட்டரில் இல்லவே இல்லை. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்ய உள்ளேன் என்று கூறியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கேன்ஸ் பட விழாவில் ரஜினி போகாததற்கு அவரது உடல்நிலை சரியாக இல்லாதது தான் காரணம் என்றும், அதனால் தான் கோச்சடையான் டிரைலர் கேன்ஸ் விழாவில் வெளியிடப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியானது. ஆனால் இதனை படத்தின் தயாரிப்பாளர் மறுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.