சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி | பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு மரியாதை இல்லையா : பிரியாமணி பதில் | 'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் |
எச்.ஐ.வி. மற்றும் கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தென்னாப்பிரிக்காவின் ஐசிசி அரைய் டர்பன் என்ற மாபெரும் அரங்கத்தில் ஒரு மாபெரும் இசை நிகழ்ச்சி இன்று (ஜூன் 1ம் தேதி) நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 20 ஆயிரம் தமிழ் ரசிகர்கள் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சியை செரண்டிபட்டி குழுவினர் நடத்துகின்றனர். 2001ல் முதல் இன்று வரை சுமார் 3000 இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கும் லோகு இன்னிசை குழுவினர் இந்த நிகழ்ச்சியை லைவ் இன்ஸ்ட்ரூமென்ட் மூலம் நடத்தவிருக்கிறார்கள். இதற்காக சுமார் ஐம்பது இசைக்கலைஞர்கள் சென்னையிலிருந்து கிளம்பியிருக்கிறார்கள். இவர்களுடன் தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகர்கள் மனோ, சின்னக்குயில் சித்ரா, "எக்ஸ்யூஸ்மீ மிஸ்டர் கந்தசாமி..." புகழ் சுசித்ரா, "அடடா மழைடா..."புகழ் ராகுல் உள்ளிட்ட ஏராளமான பாடகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று பாட உள்ளனர். நிகழ்ச்சியில் கிடைக்கும் வருமானத்தின் பெரும் பகுதியை எய்ட்ஸ் நோயாளிகள், மற்றும் கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவிருக்கிறார்கள்.