சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி | பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு மரியாதை இல்லையா : பிரியாமணி பதில் | 'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் |
அரவான் படத்தையடுத்து வசந்தபாலன் இயக்கும் படம் காவியத்தலைவன். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் சித்தார்த்-அனைகா ஜோடி சேருகின்றனர். மேலும், இன்னொரு ஹீரோவாக மலையாள நடிகர் பிருதிவிராஜ் நடிக்கிறார். அவருக்கு ஜோடி இன்னமும் முடிவாகவில்லை. கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் ஆகியோரின் இன்ஸ்பிரேசனில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் பாடகராக நடிக்கிறார் சித்தார்த். அதனால் தனது வழக்கமான மேனரிசத்தை ஏறக்கட்டிவிட்டு இப்படத்துக்காக பழமை, புதுமை கலந்து ஒரு வித்தியாசமான கெட்டப்பில் வெளிப்படப்போகிறாராம் சித்தார்த்.
இதில் முதன்மை நாயகன் சித்தார்த்தான் என்றாலும், கிட்டத்தட்ட அவருக்கு இணையான இன்னொரு மாறுபட்ட ரோலில் பிருதிவிராஜ் நடிக்கிறாராம். அவர் எந்த மாதிரி வேடத்தில் நடிக்கிறார் என்பதை இன்னும் சொல்லாத வசந்தபாலன், அவருக்கான ஜோடி நடிகை தேடுவதில் தீவிரமடைந்திருக்கிறார். முன்னணி நடிகை என்பதைவிட தற்போது மார்க்கெட்டில் வளர்ந்து வரும் நடிகைகளாக பரிசீலனை செய்து வருகிறார். இப்படி ப்ருதிவிராஜ்க்கு அவர் ஜோடி தேடும் சமாச்சாரம் தற்போது தமிழில் வளர்ந்து வரும் மலையாள நடிகைகளான லட்சுமிமேனன், நஸ்ரியா நசீம் ஆகியோரின் காதுகளுக்கு எட்ட, இருவருமே அப்படத்தை கைப்பற்றி விட வேண்டும் என்று முண்டியடித்து வருகிறார்களாம். இரண்டு நடிகைகளுமே தனது படத்தில் நடிப்பதற்கு அதிக ஆர்வமாக இருப்பதால் யாரை ஒப்பந்தம செய்வது என்று வசந்தபாலனே திணறிக்கொண்டிருக்கிறாராம்.