சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
தமிழ் சினிமாவின் ஆச்சி என்று புகழப்படும் நடிகை மனோரமா உடல்நலக் குறைவு காரணமாக மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜி முதல் தற்பேதைய நடிகர்கள் விஷால் வரை உள்ள நடிகர்களின் படங்களில் நடித்தவர் நடிகை மனோராமா. காமெடி என்றால் நடிகர்கள் மட்டும் தான் எனும் நிலையை மாற்றியவர் நடிகை மனோராமா. நடிகைகளும் காமெடியில் ஜொலிக்க முடியும் என்று நிரூபித்தவர். காமெடி, குணச்சித்திரம் என்று பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார். வயதான பிறகு சினிமா வாய்ப்புகளை குறைத்து கொண்டவர் அவ்வப்போது சில படங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காளஹஸ்தி கோவிலுக்கு சென்ற போது, அங்கு அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையின் குளியல் அறையில் வழுக்கி விழுந்தார். இதில் அவரது தலையில் அடிபட, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாதம் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார். அதனைத்தொடர்ந்து சூர்யாவின் சிங்கம்-2 படப்பிடிப்பில் கலந்து கொண்டார். தற்போது அந்தப்படமும் வெளிவர இருக்கிறது. இந்நிலையில் மீண்டும் மனோரமாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை, தி.நகரில் உள்ள தனியார் மருத்துவனையில் ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.