சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி | பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு மரியாதை இல்லையா : பிரியாமணி பதில் | 'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் |
மலையாள சினிமாவில் முக்கிய நடிகைகளில் மஞ்சுவாரியாரும் ஒருவர். மோகன்லால், சுரேஷ்கோபி, பிஜூமேனன், ஜெயராம் உள்பட அங்குள்ள முன்னணி நடிகர்களுடன் ஒரு பெரிய ரவுண்டே வந்தவர். அதோடு, கதாநாயகர்களுக்கு இணையான வேடங்களிலும் நடித்தவர். அந்த நேரத்தில் மலையாள நடிகர் திலீப்புக்கும், மஞ்சுவாரியாருக்குமிடையே காதல் மலர்ந்தது. 1998-ல் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அதையடுத்து நடிப்புக்கு முழுக்குப்போட்டார் மஞ்சுவாரியார்.
இந்த நிலையில், திலீப்புக்கும், இன்னொரு மலையாள நடிகையான காவ்யா மாதவனுக்குமிடையே நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், மஞ்சுவாரியாருக்கும், திலீப்புக்குமிடையே சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. அதேபோல், காவ்யாமாதவனுக்கும், அவரது கணவருக்குமிடையேயும் பிரச்னை ஏற்பட்டு, அது விவாகரத்தில் முடிந்தது. ஆனால் அதையடுத்து, திலீப்பும் தனது மனைவி மஞ்சுவாரியாரை விவகாரத்து செய்து விட்டு காவ்யா மாதவனுடன் இணைந்து விட்டதாக தற்போது மலையாள படவுலகில் செய்தி பரவியுள்ளது.
அதனால் இதுவரை இந்த விவகாரம் சம்பந்தமாக எந்த பதிலும் சொல்லாமல் இருந்த திலீப், இப்போது வெளியே வந்திருக்கிறாராம். அதாவது மஞ்சுவாரியாரை விவகரதது செய்துவிட்டதாக பரவிய செய்தியில் உண்மையில்லை என்று மறுத்துள்ள அவர், எல்லா குடும்பத்திலும் நடப்பது போல் எங்களுக்குள்ளும் சிறு பிரச்சினை வந்தது. அதன்காரணமாக நாங்கள் பிரிந்திருக்கிறோம். ஆனால் மீண்டும் இணைந்து விடுவோம் என்று கூறியுள்ளார்.