சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
ஜீவா-அஞ்சலி நடித்த படம் கற்றது தமிழ். இந்த படத்தை ராம் இயக்கியிருந்தார். நல்ல தரமான படம் என்ற டாக் இருந்தபோதும் இப்படம் எதிர்பார்த்தபடி வசூலிக்கவில்லை. அதனால் அதையடுத்து உடனடியாக ராமுக்கு படம் இயக்கும் வாய்ப்பு அமையவில்லை. பல வருடங்களாக போராடி வந்தவர், இப்போது டைரக்டர் கெளதம்மேனனின் தயாரிப்பில் தங்கமீன்கள் என்றொரு படத்தை இயக்கியிருக்கிறார். அப்பா- மகளுக்கிடையேயான பாசத்தை மையமாகக்கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் நாயகனாகவும் ராமே நடித்துள்ளார்.
இதற்கான கதையை முதலில் கெளதம்மேனனிடம் அவர் சொன்னபோது, வேறு நடிகர்களை யாரையாவது ஹீரோவாக நடிக்க வைக்கலாம் என்றுதான் சொன்னாராம் ராம். ஆனால், கெளதம்மேனன்தான் இந்த மாதிரி கதைக்கு பெரிய ஹீரோ தேவையில்லை. நீங்களேகூட நடிக்கலாம். அதுவும் கதையை உருவாக்கிய நீங்கள் நடித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று ராமை நாயகனாக நடிக்குமாறு வற்புறுத்தினாராம். அதனால்தான் தங்கமீன்கள் படத்தில் பாசமான அப்பாவாக நடித்தாராம் டைரக்டர் ராம்.
இப்படம் சமீபத்தில் தணிக்கை செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. படத்தைபார்த்த அதிகாரிகள், ஒரு கட்கூட கொடுக்கவில்லையாம். நல்ல தரமான படம் என்று சொல்லி யு சான்றிதழ் கொடுத்துள்ளார்களாம். இதையடுத்து விரைவில் திரைக்கு வரத்தயாராகி வரும் தங்க மீன்கள் படத்தை, உலக திரைப்பட விழாக்களுக்கு அனுப்பவும் திட்டமிட்டுள்ளாராம் கெளதம்மேனன். இப்படத்தின் உணர்வுப்பூர்வமான கதை, காட்சிக்காக கண்டிப்பாக விருதுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறராம் அவர்.