சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி | பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு மரியாதை இல்லையா : பிரியாமணி பதில் | 'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் |
நயன்தாராவுக்கு புதிய பட வாய்ப்புகள நிறைய வருகிறதாம். அந்த படங்களில் நடிப்பவர்களும் முன்னணி ஹீரோக்களாக இருக்கிறார்களாம். ஆனால், கதை என்று கேட்கிறபோது, நயன்தாராவை முத்தின நடிகை என்ற கணக்கில்தான் வைக்கிறார்களாம். அதாவது, பிளாஷ்பேக்கில் வருவது, இல்லையேல் ஏதாவது கேரக்டரில் வந்து செல்வது எனறுதான் கதை சொல்கிறார்களாம்.
அதோடு, ஹீரோக்களுக்கு ஜோடியாகவும் இல்லையாம். தற்போது வளர்ந்து வரும் இளவட்ட நடிகைகளைதான் ஜோடி சேர்க்கிறார்களாம். தமிழில் நயன்தாரா பெரிய அளவில் எதிர்பார்த்த வலை படத்தில் டாப்ஸிக்குத்தான் முக்கியத்துவமாம். அதேபோல் ராஜாராணியில் நேரம் படத்தில் நடித்த நஸ்ரியா நசீம்தான் ஆர்யாவுக்கு ஜோடியாம். அதனால் நயன்தாராவை முக்கியமான கேரக்டர்களுக்கே பயன்படுத்தியிருக்கிறார்களாம்.
அதனால்தான் இப்போது, ஹீரோயிசமுள்ள படங்கள் தனக்கு வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் நயன்தாரா. அதன்காரணமாகவே கஹானி ரீமேக் படத்தில் நடிப்பவர், அதேபோன்று தனக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேடி வருகிறாராம். அப்படிப்பட்ட கதைகளில் நடிக்கிறபோது ஒரு ஹீரோவுக்குரிய அநதஸ்து தனக்கு கிடைக்கும் என்று கருதுகிறாராம் நயன்தாரா.