சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி | பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு மரியாதை இல்லையா : பிரியாமணி பதில் | 'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் |
பெரும்பாலும் நடிகைகளைப்பொறுத்தவரை 15 வயதிலேயே நடிக்க வந்து விடுகிறார்கள். அதனால் அவர்களது படிப்பு பத்தாம் வகுப்போடு கட்டாகி விடுகிறது. அப்படி படிப்பை பாதியில் விட்ட பத்மப்பிரியா இப்போது வெளிநாடு சென்று படிப்பை தொடர்ந்து வருகிறார். அதேபோல் மேக்னாராஜ், பெங்களூரில் பாதியில் விட்ட படிபபை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
ஆனால், பூ படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்த பார்வதி அந்த படத்தில் நடிக்கும்போதும் சரி, நடித்து முடித்தபிறகும் சரி இன்னமும் படித்துக்கொண்டுதான் இருக்கிறார். இதுபற்றி அவர் கூறுகையில், எங்கள் ஊரான கேரளாவில் படிப்புக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதனால் நானும் நிறைய படிக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறேன். அதனால்தான், சினிமாவில் நடிக்க வந்த பிறகும் நான் படிப்பை விடவில்லை. இப்போது மரியான் படத்துக்குபிறகும்கூட எனது படிப்பு தொடர்கிறது. புதிதாக படங்கள் கமிட்டானால்கூட படிப்புக்கு இடையூறு ஏற்படாத வகையில்தான் கால்சீட் கொடுப்பேன் என்று சொல்லும் பார்வதி, என்னைப்பொறுத்தவரை எப்போதுமே படிப்புக்குத்தான் முதலிடம் கொடுப்பேன். சினிமா என்பது எனக்கு இரண்டாம்பட்சம்தான் என்கிறார்.