விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் நடிகைகள் குண்டாக இருந்தால் மட்டுமே முன்னணி இடத்தை பிடிக்க முடியும் என்பது எழுதி வைக்கப்பட்ட தீர்ப்பு. அதனால் தமிழுக்கு என்ட்ரியாகும் நடிகைகள் முதலில் குஷ்பூவை தங்களது ரோல் மாடலாக்கிக்கொள்கின்றனர். (அவரை மாதிரி குண்டாக) ஆனால் நல்ல சைசாக உடம்பை பேணி வளர்க்கிறார்கள். அதையடுத்துதான் சரியான படத்தை தேர்ந்தெடுத்து என்ட்ரி கொடுக்கிறார்கள். ஆனால் ஹன்சிகாவைப்பொறுத்தவரை வரும்போது குஷ்பூவை விடவும் குண்டாக வந்தார். ஆனால், நாளடைவில் சற்று குறைத்து தமிழ்நாட்டு ரசிகர்களின் டேஸ்டுக்கு ஏற்ற நடிகையாக தன்னை உருவாக்கிக்கொண்டார்.
அதையடுத்து, அவரது மார்க்கெட்டும் கெட்டியானது. ஒல்லிக்குச்சி நடிகைகளான தமன்னா, அமலாபால் உள்ளிட்ட நடிகைகளும் அவர் வந்த நேரத்தில் எஸ்கேப்பாகி விட்டதால், இப்போது ஹன்சிகாவை வீழ்த்த நடிகை இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது.
ஆனால், இந்த நேரத்தில் எதிர்நீச்சல் படத்தில் நடித்துள்ள ப்ரியா ஆனந்த், தமிழில் நிலையான இடத்தை பிடிக்க வேண்டுமென்றால் உடல் பெருக்க வேண்டும் என்பதை புரிந்துகொண்டு தனது ஒல்லிக்குச்சி உடம்பை குண்டாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளாராம். அதனால் இதுவரை அடிக்கடி காத்து வாங்க ஜிம்முக்கு சென்று வந்த ப்ரியா, இப்போது அந்த பக்கம் தப்பித்தவறியும் செல்வதில்லையாம். உடம்பை புஷ்டியாக்கும் ஐஸ்கிரீம் மற்றும் நான்வெஜ் அயிட்டங்களை பொளந்து கட்டி வருகிறாராம். கூடிய சீக்கிரமே நானும் ஹன்சிகா மாதிரி கொளு கொளு உடம்புக்காரியாக மாறி, கோலிவுட்டை ஒரு கலக்கு கலக்குவேன் என்று மார்தட்டுகிறார் ப்ரியாஆனந்த்.