எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் |
சினிமாவைப்பொறுத்தவரை காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார் சிவகார்த்திகேயன். பாண்டியராஜ் இயக்கத்தில் விமலுடன் இணைந்து அவர் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா மற்றும் தனுஷ் தயாரிப்பில் நடித்த எதிர்நீச்சல் என்ற இரண்டு படங்களும் மெகா ஹிட் ஒன்றும் இல்லை. சுமாராக ஓடிய படங்கள்தான். ஆனால் அந்த சுமாரான வெற்றியை முன்வைத்தே சிவகார்த்திகேயனை முன்னணி ஹீரோ ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து விட்டார்கள். அதன்காரணமாக இதுதான் சரியான தருணம் என்று அவரும் காலரை தூக்கி விட்டுள்ளார்.
குறிப்பாக, தன்னை முற்றுகையிட்ட சில தரமான டைரக்டர்களைகூட கண்டுகொள்ளாத அவர், முன்னணி கம்பெனி மூலமாக தன்னை தொடர்பு கொள்ளும டைரக்டர்களிடம் மட்டுமே காது கொடுத்து கதை கேட்கிறார். அதிலும் மேல்தட்டு நடிகர்களைப்போன்று எனது ரசிகர்களுக்கு இதெல்லாம் பிடிக்காது. அதனால் அந்த காட்சிகளை இந்த மாதிரி மாற்றுங்கள். அதேபோல், இந்தந்த டெக்னீசியன்கள்தான் எனக்கு செட்டாகும் என்றும் சொல்லி ஒரு பட்டியலை தூக்கிப்போடுகிறாராம்.
இப்படி சிவகார்த்திகேயனின் நடவடிக்கைகளும் மாறி இருப்பதால், அவரை மாதக்கணக்கில் தொடர்பு கொண்டு கால்சீட் கேட்டு வந்த கம்பெனிகளெல்லாம் இப்போது பின்வாங்கி விட்டன. இந்த நிலையில், ஸ்டுடியோ கிரீன், திருப்பதி பிரதர்ஸ் உள்ளிட்ட சில கம்பெனிகளின் படங்களில் மட்டுமே அடுத்தடுத்து நடிக்கயிருக்கிறார் சிவார்த்திகேயன். முன்னதாக, அவர் நடித்து வந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வேலைகள் தற்போது துரிதமாக நடந்து வருகிறது.