ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
ஷாரூக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான 'ஜவான்' படம் நல்ல வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. கடந்த வருடம் கடைசியாக வெளியான 'டங்கி' எமோஷனல் படமாக நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து ஷாரூக்கான் முழுக்க முழுக்க நெகட்டிவ் கேரக்டரில் அதிரடி ஆக்ஷன் படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை சுஜாய் கோஷ் இயக்குகிறார். இப்படத்திற்கு 'கிங்' எனப் பெயரிட்டுள்ளனர். இந்த படத்தை சர்வதேச படமாக உருவாக்க இருக்கிறார்கள்.
இந்த படத்தில் ஷாரூக்கான் மகள் சுஹானா படத்திலும் மகளாகவே நடிக்கிறார். ஏற்கெனவே ஜோயா அக்தர் இயக்கத்தில் 'தி ஆர்ச்சிஸ்' என்ற ஓடிடி படத்தில் அறிமுகமான சுஹானா, இப்படத்தின் மூலம் நேரடி திரையரங்க திரைப்படத்தில் நடிக்கிறார். கொடூரமான மனிதன் மகள் மீது மிகுந்த பாசம் கொண்டவனாக இருக்கிறான். அதனால் தனக்கு தெரிந்த அத்தனை வித்தைகளையும் மகளுக்கு கற்றுக் கொடுத்து அதை நேர்மையாக பயன்படுத்தி அவளை ஹீரோயின் ஆக்குவது மாதிரியான கதை. கடைசியில் மகளே தந்தையை கொன்று விடுவது போன்றும் கதை அமைக்கப்பட்டிருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
இந்த படத்திற்காக இப்போதே சுஹானா கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். 2025ம் ஆண்டு தீபாவளிக்கு படத்தை வெளியிட திட்டமிட்டு பணியாற்றி வருகிறார்கள். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது.