ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
2024 கோடை விடுமுறையைப் பொறுத்தவரையில் மே மாதத்தை மட்டும்தான் முழுமையான விடுமுறை மாதம் என சொல்ல முடியும். கடந்த மாதம் பள்ளித் தேர்வுகள், தேர்தல் என சினிமாவுக்கான ஆர்வம் நிறையவே குறைந்திருந்தது. தமிழ்ப் புத்தாண்டுக்குக் கூட குறிப்பிடும்படியான படங்கள் வெளியாகவில்லை.
ஏப்ரல் மாதம் இன்றுடன் முடிகிறது. நாளை முதல் மே மாதம் ஆரம்பமாகிறது. இந்த வாரம் வெளியாகும் படங்கள் இந்த விடுமுறை நாளை நன்றாகவே கொண்டாட வைக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
மே 3ம் தேதி 'அரண்மனை 4, அக்கரன், குரங்கு பெடல், நின்னு விளையாடு, தி ப்ரூப்” ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில்
'அரண்மனை 4' படம் மீது ஓரளவிற்கு எதிர்பார்ப்பு உள்ளது. சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கண்ணா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் இது. சில திரைப்பட விழாக்களில் கலந்து கொண்ட 'குரங்கு பெடல்' படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் அவரது தயாரிப்பு நிறுவனம் மூலம் வெளியிடுகிறார். அதனால், இந்தப் படமும் கவனத்தைப் பெற்றுள்ளது. கடந்த நான்கு மாதங்களாக தமிழ் சினிமாவில் உள்ள வறட்சியை இந்த கோடைக் கால படங்கள் தீர்த்து வைக்கும் என நம்புவோம்.