50 பேர் ஆசீர்வாதத்தால் கிடைத்த வாய்ப்பு: நமிதா நெகிழ்ச்சி | ஜெய் படம் மூலம் தமிழுக்கு வரும் கன்னட நடிகை | ஆண்ட்ரியா படத்தின் காட்சிகளை மாற்ற நீதிமன்றம் உத்தரவு | ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்கு திரையுலகை விட்டு ஒதுங்கியது ஏன்? : கமாலினி முகர்ஜி | மும்பையில் உள்ள அபார்ட்மென்ட்டை குறைந்த லாபத்திற்கு விற்ற சோனு சூட் | பிரித்விராஜ் செய்யலாம்.. நான் செய்யக்கூடாதா? : மலையாள குணச்சித்திர நடிகர் கேள்வி |
தெலுங்கில் கடந்த 2022ல் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ஒடேலா ரயில்வே ஸ்டேஷன். இந்த படத்தில் இரண்டாம் பாகமாக தற்போது 'ஒடேலா 2' என்கிற படம் தயாராகிறது. . இந்த படத்தில் கதாநாயகியாக தமன்னா நடிக்கிறார். முதல் பாகத்தில் பூஜிதா பொன்னாடா, ஹெபா படேல் என பெரிய அளவில் பிரபலம் இல்லாத கதாநாயகிகள் நடித்திருந்த நிலையில் இந்த படம் எதிராபாராத விதமாக வெற்றி பெற்றதால் இரண்டாம் பாகத்திற்கு இன்னும் பெரிய ரீச் கிடைக்கும் விதமாக தமன்னாவை ஒப்பந்தம் செய்துள்ளார்கள். முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் அசோக் ராஜா தான் இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்..
முதல் பாகத்தில் கதாநாயகன் என யாருக்கும் பெரிய முக்கியத்துவம் கொடுக்காமல் படம் வெளியான நிலையில் இந்த இரண்டாம் பாகத்திலும் தமன்னாவை மையப்படுத்திய இந்த படம் உருவாகி வருகிறது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் தமன்னாவின் சிவசக்தி கதாபாத்திரம் குறித்து ஒரு அறிமுக வீடியோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். சிவசக்தி கதாபாத்திரத்திற்காக தமன்னா ஒப்பனை செய்து கொண்டு சிவசக்தியாக உருமாறுவது வரையிலான காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன. பார்ப்பதற்கே வித்தியாசமான ஒரு தோற்றத்தில் உள்ளார் தமன்னா.