அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
மலையாள சினிமா இந்த வருடம் ஆச்சரியங்களுக்கு மேல் ஆச்சரியத்தை அளித்து வருகிறது. இந்த ஆண்டின் 4வது 100 கோடி படமாக 'ஆவேஷம்' அமைந்துள்ளது. இரண்டே வாரங்களில் இந்த சாதனையை இந்தப் படம் படைத்துள்ளது.
ஜித்து மாதவன் இயக்கத்தில் பஹத் பாசில், ஹிப்ஸ்டர், மிதுன் ஜெயசங்கர் மற்றும் பலர் நடிப்பில் கடந்த 11ம் தேதி வெளியான படம் இது. நல்ல விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம் இந்தியாவில் சுமார் 60 கோடியும், வெளிநாடுகளில் 40 கோடியும் வசூலித்து ரூ.100 கோடியைக் கடந்துள்ளது.
இந்த வருடத்தில் இதற்கு முன்பு வெளிவந்த படங்களில், “பிரேமலு, மஞ்சும்மேல் பாய்ஸ், ஆடுஜீவிதம்” ஆகிய படங்கள் 100 கோடி வசூலைக் கடந்துள்ளன.
மலையாளத்தில் பஹத் பாசிலின் முதல் 100 கோடி படம் இது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. பஹத் பாசில் மற்ற மொழிகளில், தமிழில் 'விக்ரம்', தெலுங்கில் 'புஷ்பா' ஆகிய படங்கள் பெரும் வசூலைக் குவித்த படங்கள்.