பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? | மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் | பராசக்தி படத்திற்காக சிறப்பு கண்காட்சி |

திருமணத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் மார்க்கெட் குறைந்தாலும் தெலுங்கு சினிமாவில் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் காஜல் அகர்வால். 2007ம் ஆண்டு வெளிவந்த 'லக்ஷ்மி கல்யாணம்' படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானவருக்கு 2009ம் ஆண்டு ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த 'மகதீரா ' படம் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. அதைத் தொடர்ந்து டார்லிங், பிருந்தாவனம், மிஸ்டர் பெர்பக்ட், நாயக், பிசினஸ்மேன் போன்ற படங்களில் முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்தார்.
திருமணத்திற்கு பிறகு காஜல் தமிழில் நடித்த ஹேய் சினாமிகா, கோஸ்டி, கருங்காப்பியம் படங்கள் அவருக்கு எந்த பலனையும் தரவில்லை. தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். ஆனால் தெலுங்கில் கடைசியாக நடித்த 'பகவன்த் கேசரி' படம் அவருக்கு ரீ என்டரி கொடுத்தது. தற்போது அவர் தெலுங்கில் நடித்துள்ள படம் 'சத்யபாமா'.
இந்த படத்தில் காஜல் சோலோ ஹீரோயினாக என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அறிமுக இயக்குனரான சுமன் சிக்கலா இப்படத்தை இயக்கியுள்ளார். காஜல் அகர்வாலுடன் பிரகாஷ்ராஜ் மற்றும் நவீன் சந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். படம் வரும் மே 17ம் தேதி வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.