500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் |
ஹரி இயக்கத்தில் விஷால், பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‛ரத்னம்'. ஏப்., 26ல் திரைக்கு வருகிறது. விஷால் அளித்த பேட்டி : ‛‛இயக்குனர் ஹரியிடம் நான் தான் போய் வாய்ப்பு கேட்டேன். இந்த கதை பிடித்ததால் நடித்தேன். படத்தில் ஒரு சஸ்பென்ஸ் உள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்தேனோ அதேமாதிரி 15 கிலோ எடையை குறைத்து ஹரி முன்னாடி வந்து நின்றேன்.
துப்பறிவாளன் 2வில் நடித்துக் கொண்டே இயக்க போகிறேன். நான் இவ்வளவு சீக்கிரம் இயக்குனர் ஆனதற்கு இயக்குனர் மிஷ்கினுக்கு நன்றி சொல்கிறேன். சினிமா எல்லோருக்கும் பொதுவானது. நான் அனைவருக்காகவும் பேசுகிறேன். சரியான திட்டமிடல் இல்லைன்னா படம் தயாரிக்க வராதீங்க. படம் துவங்கும்போது நல்லநாள் பார்த்து பூஜை போட்டு துவங்குறீங்க... படம் வெளியிடும்போது மாட்டிக் கொள்றீங்க. சரியான திட்டமிடுங்கள் என்று தான் சொல்கிறேன்.
யாராவது பெண்கள் மீது கை வைத்தால் யாராக இருந்தாலும் அடிச்சுடுவேன். சென்னை, அம்பத்தூர் பக்கம் போய் சாலையை எல்லாம் போய் பாருங்க. எவ்வளவு மோசமாக உள்ளது என்று. இங்கு அரசியல் கட்சிக்காரங்க சரியா வேலை பார்க்கல. அவர்கள் பார்க்கவில்லை என்றால் நடிகர்கள் இறங்கி வேலை பார்ப்போம். ரீ-ரிலீஸ் படங்கள் வரவேற்பு என்பது பாசிங் டிரெயின் போன்றது. நல்ல படங்கள் கொடுத்தால் மக்கள் நிச்சயம் வரவேற்பார்கள், கொண்டாடுவார்கள். என்னிடம் இப்போது காரே இல்லை. எல்லா காரையும் விற்றுவிட்டேன். அதனால் தான் ஓட்டுப்போட சைக்கிளில் சென்றேன்'' என்றார்.