யாரிடமும் எளிதில் சிக்க மாட்டேன் : கயாடு லோஹர் | 'கம் பேக்' கொடுக்கப் போகும் லைகா | மலையாள பட இயக்குனருடன் கைகோர்த்த ஜீவா | பாண்டிராஜ், விஜய் சேதுபதி படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை | விஜய்க்காக பின்னணி பாடிய ராப் இசைக் கலைஞர் அனுமான் கைண்ட் | கூலி படத்தை அடுத்து கைதி 2 வை இயக்கும் லோகேஷ் கனகராஜ் | அர்ஜூன் தாஸிற்கு தாதா சாகேப் பால்கே விருது!; 'ரசவாதி' படத்திற்காக அவர் பெறும் 3வது விருது | 7 வருடங்களுக்கு பிறகு திரைக்கு வரும் ஜி.வி. பிரகாஷ் படம்! | ஜெய்யின் 'வொர்கர்' புதிய பட அறிவிப்பு! | மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் வெளியாகாத ரெட்ரோ, ஹிட் 3 ஹிந்தி பதிப்புகள் ; காரணம் என்ன ? |
இந்திய சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என பெயர் எடுத்தவர் தமிழ் சினிமாவை சேர்ந்த ஷங்கர். இவரது இரு மகள்களில் இரண்டாவது மகளான அதிதி தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், புதுச்சேரியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரோஹித்துக்கும் 2022ல் திருமணம் நடந்தது. பின்னர் அவர்கள் பிரிந்துவிட்டனர்.
அதன்பின் ஐஸ்வர்யாவுக்கு ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரியும் தருண் கார்த்திகேயன் உடன் சில மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் இன்று(ஏப்., 15) இவர்களின் திருமணம் கோலாகலமாக சென்னையில் நடந்தது.
மணமக்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். ரஜினி, கமல், சூர்யா, கார்த்தி, விக்ரம், விஷால், அர்ஜூன், பாரதிராஜா, மணிரத்னம், சுஹாசினி, பாக்யராஜ், பி வாசு, கேஎஸ் ரவிக்குமார், ஹரி, பிரீத்தா, விஷ்ணுவர்தன், அனுவர்தன், விக்னேஷ் சிவன், நயன்தாரா, ரவிகுமார், கீர்த்தி சுரேஷ், நாசர், கமிலா, சித்தார்த், அதிதி ராவ், பிரியா ஆனந்த், ஒய்.ஜி.மகேந்திரன், செந்தில், விஜயகுமார், சமுத்திரகனி, பிரியா அட்லி, அன்பறிவு, நகுல், சுனில், ராம்குமார், சாந்தனு, ஸ்ரீகாந்த், அஜய் ரத்னம், தாமு, வையாபுரி உள்ளிட்ட பலர் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.
விருந்தினர்களை இயக்குனர்கள் லிங்குசாமி, அட்லி, வசந்த பாலன், பரத் ஆகியோர் வரவேற்றனர்.