அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
'முகமூடி' படத்தின் மூலம் மிஷ்கினால் அறிமுகப்படுத்தப்பட்டவர் பூஜா ஹெக்டே. அந்த படம் வரவேற்பை பெறாத நிலையில் தொடர்ந்து வாய்ப்பில்லாமல் போகவே தெலுங்கு பக்கம் சென்று அங்கு முன்னணி நடிகை ஆனார். ஆனால் அவர் சமீபகாலமாக நடித்த படங்கள் தோல்வி அடைந்தது. இதனால் அவர் ராசி இல்லாத நடிகை என்ற பெயரையும் பெற்றார்.
இந்த நிலையில் ரூ.45 கோடி ரூபாய்க்கு வீடு வாங்கி உள்ளார். மும்பையின் பாந்த்ரா பகுதியில் 4,000 சதுர அடியில் இந்த வீடு அமைந்துள்ளது. அவர் முன்பு நகரத்திற்குள் மற்றொரு குடியிருப்பில் வசித்து வந்தார். தற்போது தனது புதிய வீட்டில் குடியேறி உள்ளார்.
தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால் அவரது சம்பளம் கணிசமாக குறைந்து வருகிறது. ஒரு படத்திற்கு தென்னிந்தியாவில் 2 கோடியும், ஹிந்தியில் 3 கோடியும் சம்பளம் வாங்குகிறார். அப்படி இருந்தும் 45 கோடிக்கு அவர் வீடு வாங்கியிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.