அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
தமிழ் சினிமாவில் நிராகரிக்கப்பட்டு ஹிந்தி சினிமாவில் பெரிய வெற்றி பெற்றவர் வித்யாபாலன். தற்போது அங்கு முன்னணி நடிகையாக இருக்கிறார். படங்களில் நடிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் பொது வெளியில் பல கருத்துகளை தைரியமாக முன்வைப்பவர். குறிப்பாக, நடிகை என்றால் உடல் மெலிந்து சிவப்பாக இருக்க வேண்டும் என்ற பிம்பம் மீது தன்னுடைய கடுமையான விமர்சனங்களை வைத்தவர். தொழில் அதிபர் சித்தார்த் ராய் கபூரை 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் தனது முதல் காதல் தோல்வி குறித்து பேசியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது : எல்லோருக்கும் முதல் காதல் மறக்க முடியாத நல்ல அனுபவங்களைக் கொடுத்திருக்கும். ஆனால், எனக்கு அது கசப்பான நினைவுகளைத்தான் கொடுத்திருக்கிறது. நான் கல்லூரியில் படிக்கும்போது ஒருவரைக் காதலித்தேன். அவரால் நான் ஏமாற்றப்பட்டேன். இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் அவரால் என் இதயம் நொறுங்கிவிட்டது.
காதலர் தினத்தன்று எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். கல்லூரிப் பெண்ணான நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால், அன்று என்னிடம் வந்து, 'நான் இன்று என் முன்னாள் காதலியுடன் டேட்டிங் செல்ல இருக்கிறேன் என்று என் காதலர் சொன்னார். நினைத்துப் பாருங்கள், அப்போது என் மனது என்ன பாடு பட்டிருக்கும்? அதோடு என் வாழ்க்கையில் அவர் தேவை இல்லை என்று முடிவு செய்துவிட்டேன். அந்த உறவில் இருந்தும் வெளியே வந்து விட்டேன். ஆனால், அதன் பிறகு எனக்கு இப்போது மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கைக் கிடைத்திருக்கிறது. என்று கூறியுள்ளார் வித்யாபாலன்.