அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
திரைத்துறையிலும், அரசியலிலும் எம்.ஜி.ஆருக்கு உறுதுணையாக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். எம்.ஜி.ஆரிடம் சம்பளம் பெற்ற ஆர்.எம்.வீரப்பன் எம்.ஜி.ஆருக்கே சம்பளம் கொடுக்கும் முதலாளியாகவும் மாறினார்.
'சத்யா மூவீஸ்' என எம்.ஜி.ஆரின் தாயாரின் பெயரிலேயே திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். எம்.ஜி.ஆரின் திரைப்பயணத்தில் முக்கிய படங்களான ரிக்ஷாக்காரன், இதயக்கனி, உள்ளிட்ட படங்களை தயாரித்தார்.
எம்.ஜி.ஆர் நடிப்பதற்காக 'ராணுவ வீரன்' என்ற கதையை எழுதினார் ஆர்.எம்.வீரப்பன். அப்போது எம்ஜிஆர் அரசியலில் பிசியாகி விட்டதால் அந்த கதையில் அவர் நடிக்கவில்லை. எம்.ஜி.ஆர் அளவிற்கு அப்போது சினிமாவில் வளர்ந்து வந்தவர் ரஜினி. எனவே அந்த கதையில் ரஜினியை நடிக்க வைத்து 'ராணுவ வீரன்' என்ற பெயரிலேயே அந்த படத்தை தயாரித்தார்.
எஸ்.பி.முத்துராமன் இயக்கிய இந்த படத்தில் ரஜினி ஜோடியாக ஸ்ரீதேவி நடித்திருந்தார். சிரஞ்சிவி வில்லனாக நடித்திருந்தார். 1981ம் ஆண்டு படம் வெளியானது. பின்னாளில் மாப்பிள்ளை, பாட்ஷா உள்ளிட்ட சில ரஜினி படங்களை சத்யா மூவீஸ் தயாரித்தது. எம்.ஜி.ஆரை போன்றே ரஜினிக்கும் நெருக்கமானவராக இருந்தார் ஆர்.எம்.வீரப்பன்.