மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
லிங்குசாமி இயக்கத்தில், யுவன்ஷங்கர்ராஜா இசையமைப்பில், கார்த்தி, தமன்னா மற்றும் பலர் நடித்து 2010ம் ஆண்டு, ஏப்ரல் 2ம் தேதி வெளியான படம் 'பையா'. யுவன், நா முத்துக்குமார் கூட்டணியின் அருமையான பாடல்கள், அழகான பயணத்துடன் கூடிய காதல் கதை என அப்போது ரசிகர்களைக் கவர்ந்த படம். யுவனின் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் எவர்கிரீன் பாடல்களாகவே அமைந்தது.
படம் வெளியாகி 14 வருடங்கள் கழித்து இப்படத்தை ரிரிலீஸ் செய்ய உள்ளார்கள். இது குறித்து படக்குழுவினர் லிங்குசாமி, யுவன், கார்த்தி, தமன்னா ஆகியோர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்கள். “14 வருடங்களுக்குப் பிறகும் 'பையா' மீதான காதல் இன்னும் வலிமையாக இருப்பதைப் பார்க்க அதை மிகவும் சிறப்பாக உணர்கிறேன். இத்தனை காலத்திற்குப் பிறகும் பாசத்தையும், அன்பையும் இப்படம் பெற்றுக் கொண்டிருப்பதை நான் மிகவும் நன்றாகவே உணர்கிறேன். 'பையா' படத்தின் மேஜிக்கை நீங்கள் அனைவரும் மீண்டும் ஒரு முறை பெரிய திரையில் அனுபவிப்பதற்காக காத்திருக்க முடியவில்லை. லிங்குசாமி, கார்த்தி, யுவன் மற்றும் அனைத்து குழுவினருக்கும் அற்புதமான நினைவுகளுடன் முற்றிலுமான நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார் தமன்னா.
இயக்குனர் லிங்குசாமியை சந்தித்து 'பையா' படத்தின் பொன்னான தருணங்களை நினைவு கூர்ந்துள்ளார் கார்த்தி. நாளை 'பையா' படம் தமிழகம் முழுவதும் ரீ-ரிலீஸ் ஆகிறது.