ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணையும் பிரியங்கா சோப்ரா | பாலிவுட்டில் கால் பதிக்கும் அமரன் பட இயக்குனர் | ரசிகர்களைக் திருப்திப்படுத்த மோகன்லால் எடுத்த அதிரடி முடிவு | சார்பட்டா பரம்பரை 2 அப்டேட் தந்த ஆர்யா | விடாமுயற்சி படத்தில் விஜய் டிவி பிரபலம் | 2024ம் ஆண்டின் கடைசி படப்பிடிப்பு- பூஜாஹெக்டே வெளியிட்ட பதிவு | மண்ணே இல்லாத சாகுபடி முறை - முதலீடு செய்த சமந்தா | ரஜினியின் ஜெயிலர் 2 புதிய அப்டேட் வெளியானது | முதல் நாளில் உலக அளவில் 9 கோடி வசூலித்த விடுதலை 2 | வனிதா படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு |
கடந்த வருடம் மாமன்னன் படத்தின் மூலம் தனது வில்லத்தனம் கலந்த நடிப்பால் ரசிகர்களிடம் இன்னும் நெருக்கமானார் நடிகர் பஹத் பாசில். இந்த வருடம் மலையாளத்தில் அவர் நடித்துள்ள ஆவேசம் என்கிற திரைப்படம் வரும் ஏப்ரல் 11ம் தேதி வெளியாக இருக்கிறது. இன்னொரு பக்கம் தெலுங்கில் ஏற்கனவே அவர் வில்லனாக என்ட்ரி கொடுத்து அதிரவைத்த புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் இன்னும் சில மாதங்களில் வெளியாகிறது. அது மட்டுமல்ல ரஜினிகாந்தின் வேட்டையன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பஹத் பாசில்.
இதைத்தொடர்ந்து கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகிய மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ‛ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' படத்தின் இயக்குனர் விபின் தாஸ் இயக்க உள்ள புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் பஹத் பாசில். மேலும் இந்த படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் எஸ்.ஜே சூர்யாவும் நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. சமீபத்தில் ஐதராபாத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்து வரும் படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் சென்று அவரிடம் கதையை கூறி வந்துள்ளாராம் இயக்குனர் விபின் தாஸ்.
அந்த வகையில் மலையாளத்தில் இந்த படத்தின் மூலம் எஸ்ஜே சூர்யா அடியெடுத்து வைப்பார் என எதிர்பார்க்கலாம். ஜெய ஜெய ஜெய ஜெய ஹே படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது பிரித்விராஜ் மற்றும் மின்னல் முரளி இயக்குனர் பஷில் ஜோசப் இருவரையும் வைத்து குருவாயூர் அம்பல நடையில் என்கிற படத்தை இயக்கி முடித்து விட்ட விபின் தாஸ், அடுத்ததாக பஹத் பாசில் பட வேலைகளை துவங்க இருக்கிறாராம்.