மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
துபாய் : 2016 ஆண்டு முதல் தொடர்ச்சியாக அமீரக தமிழர்களின் மேடை நாடக ஆர்வத்தை வளர்த்து வரும் அமீரக குறுநாடக குழுவினர், கொரோனா பீதி சமயத்தில் மேடைகள் தடை செய்யப்பட்ட காரணத்தால் குறும்படங்கள் இயக்க தங்கள் குழுவினரை ஊக்குவித்தனர்.
2020ம் ஆண்டு முதல் தற்போது நான்காம் ஆண்டாக நடைபெறப்போகும் இவ்விழாவில் பங்கு கொள்ள அமீரகத் தமிழர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டனர். தேசிய விருது பெற்ற குழந்தை நட்சத்திரமும், தொலைக்காட்சி தயாரிப்பில் முன்னோடிகளில் ஒருவருமான நடிகை குட்டி பத்மினி நடுவராக இந்த விழாவிற்கு தலைமையேற்கிறார்.
35க்கும் மேற்பட்ட குறும்படங்கள் இதில் பங்கேற்க உள்ளனர். படங்கள் திரையிடப்படும் தேர்வு வரிசையை வீடியோ மூலம் வெளியிட்டு, வாழ்த்துக்களை தெரிவித்து ஊக்கபடுத்தினார் நடுவர். பதிவு முறை மூலம் மட்டுமே, 13ம் தேதி குட்டி பத்மினி அவர்களை நேரில் சந்தித்து உரையாடவும், ஏப்ரல் 14 காலை படங்களை பார்க்கவும் இயலும்.
ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு தினத்தன்று இந்த குறும் படங்கள் வெளியிடப்பட்டு அன்று மாலையே வெற்றியாளர்களுக்கு 12 பிரிவில் 28 வகையான பரிசுகளும், பங்கு கொண்டவர்களுக்கு நினைவு சின்னமும் வழங்கப்படும் என நிகழ்ச்சி அமைப்பாளர் ஆனந்த் மற்றும் ரமா மலர் தெரிவித்தனர்.