ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணையும் பிரியங்கா சோப்ரா | பாலிவுட்டில் கால் பதிக்கும் அமரன் பட இயக்குனர் | ரசிகர்களைக் திருப்திப்படுத்த மோகன்லால் எடுத்த அதிரடி முடிவு | சார்பட்டா பரம்பரை 2 அப்டேட் தந்த ஆர்யா | விடாமுயற்சி படத்தில் விஜய் டிவி பிரபலம் | 2024ம் ஆண்டின் கடைசி படப்பிடிப்பு- பூஜாஹெக்டே வெளியிட்ட பதிவு | மண்ணே இல்லாத சாகுபடி முறை - முதலீடு செய்த சமந்தா | ரஜினியின் ஜெயிலர் 2 புதிய அப்டேட் வெளியானது | முதல் நாளில் உலக அளவில் 9 கோடி வசூலித்த விடுதலை 2 | வனிதா படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு |
எதிர்நீச்சல் தொடரில் ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தில் கலக்கி வந்த மாரிமுத்து எதிர்பாராத விதமாக காலமானதையடுத்து தற்போது எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி அந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அண்மையில் எதிர்நீச்சல் சீரியல் மற்றும் மாரிமுத்து குறித்து ஒரு பேட்டியில் பேசிய அவர், 'மாரிமுத்து அற்புதமான கலைஞர். என்னை விட 17 வயது குறைவானவர். சூட்டிங் செல்லும் இடத்தில் எல்லாம் அவரிடம் நிறைய மக்கள் செல்பி எடுத்துக் கொள்வார்கள். இதை கொஞ்சம் பில்டப் என்று தான் நினைத்தேன். அந்த அளவிற்கு அந்த சீரியல் மூலம் மக்கள் மத்தியில் அவருக்கு வரவேற்பு கிடைத்தது. ஆனால், அந்த கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு பெரிய சவாலாகத்தான் இருக்கிறது' என்று கூறியுள்ளார்.