அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
தமிழ் சினிமாவின் அதிரடி கலைஞர் எனப் பெயர் எடுத்தவர் டி ராஜேந்தர். இயக்கம், இசை, நடிப்பு என அவரது பயணம் மகத்தானது. ஆனாலும், இன்றைய இளம் தலைமுறை சினிமா ரசிகர்கள் மத்தியில் அவர் ஒரு 'டிரோல் மெட்டீரியல்' ஆகவே பார்க்கப்படுகிறார். அவரைப் போன்று அத்தனை சூப்பர் ஹிட் வசூல் படங்களைக் கொடுத்தவரை வைத்து இப்போது பலரும் ரீல்ஸ் வீடியோக்களைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
பாலிவுட் நடிகை வித்யா பாலனும், டி ராஜேந்தர் வசனம் ஒன்றை வைத்து ரீல்ஸ் வீடியோ பதிவிட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரும், பாலிவுட்டின் மேக்கப் கலைஞரான ஹர்ஷ்ஜரிவாலாவும் இணைந்து அந்த வீடியோவில் நடனமாடி இருக்கிறார்கள். சில தமிழ் நடிகைகளும் அந்த ரீல்ஸ் வீடியோவிற்கு லைக் போட்டிருக்கிறார்கள்.
“எனக்குள் இருக்கும் கட்டுப்பாட்டுக் குழப்பம்” என அந்த வீடியோ பற்றி குறிப்பிட்டிருக்கிறார் வித்யாபாலன்.