பிளாஷ்பேக் : ஜெயலலிதாவை பாடகியாக்கிய கே.வி.மகாதேவன் | பிளாஷ்பேக் : இன்று 'ஆலம் ஆரா' பிறந்தநாள் | இளையராஜாவிற்கு அரசின் சார்பில் விழா : முதல்வர் ஸ்டாலின் | புஷ்பா கேரக்டரில் நடிக்க மறுத்தேன் - ரேஷ்மா பசுபுலேட்டி | பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவுக்கு சினிமாவில் நடந்த அவமானம் | ரன்யா ராவ் கதாநாயகியாக நடித்த வாகா திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் | மோகன்லாலின் அன்பு கட்டளையை மீற முடியவில்லை : விவேக் ஓபராய் | ரஜினியின் மனைவியாக நடிக்க வாய்ப்பு என கூறி பணம் பறிக்க முயற்சி : நடிகை எச்சரிக்கை | என் பெயரில் போலி கணக்குகள் : ரசிகர்களுக்கு டிராகன் நாயகி அலர்ட் | அனுபமா பரமேஸ்வரன் படத்தில் நடிக்கும் சமந்தா |
'கார்த்திகேயா 2' படம் மூலம் பிரபலமான நிகில் தற்போது நடிக்கும் படம் 'சுயம்பு'. பீரியட் பிலிம்மான இதில் பழம்பெரும் வீரராக நடிக்கும் நிகில் படத்தில் தன் கதாபாத்திரத்திற்காக ஆயுதம், தற்காப்பு கலை, குதிரை சவாரி போன்றவற்றில் தீவிர பயிற்சி எடுத்துள்ளார். பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம் நிகிலின் 20வது படமாகும். பிக்சல் ஸ்டுடியோவின் சார்பில் புவன் மற்றும் ஸ்ரீகர் தயாரிக்கின்றனர். பான் இந்தியா படமாக தயாராகி வருகிறது.
இப்படத்தில் சம்யுக்தா கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார். அவருடன் தற்போது நபா நடேஷ் இணைந்துள்ளார். கன்னடத்தில் அறிமுகமான நபா தெலுங்கில் தற்போது பிசியாக நடித்து வருகிறார். ஸ்மார்ட் சங்கர், டிஸ்கோ ராஜா, அல்லுடு அதர்ஸ், மேஸ்ட்ரோ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தற்போது இந்த படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் அவர் இளவரசியாக நடிக்கிறார்.