ஓடிடியில் நேரடியாக வெளியான ஹாலிவுட் படம் | பிளாஷ்பேக் : ஜெயலலிதாவை பாடகியாக்கிய கே.வி.மகாதேவன் | பிளாஷ்பேக் : இன்று 'ஆலம் ஆரா' பிறந்தநாள் | இளையராஜாவிற்கு அரசின் சார்பில் விழா : முதல்வர் ஸ்டாலின் | புஷ்பா கேரக்டரில் நடிக்க மறுத்தேன் - ரேஷ்மா பசுபுலேட்டி | பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவுக்கு சினிமாவில் நடந்த அவமானம் | ரன்யா ராவ் கதாநாயகியாக நடித்த வாகா திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் | மோகன்லாலின் அன்பு கட்டளையை மீற முடியவில்லை : விவேக் ஓபராய் | ரஜினியின் மனைவியாக நடிக்க வாய்ப்பு என கூறி பணம் பறிக்க முயற்சி : நடிகை எச்சரிக்கை | என் பெயரில் போலி கணக்குகள் : ரசிகர்களுக்கு டிராகன் நாயகி அலர்ட் |
நடிகைகள் என்றாலே அவர்கள் வேறு ஒரு உலகத்தில் பயணிப்பவர்கள் என்ற எண்ணம்தான் பலருக்கும் இருக்கும். ஆனால், ஒரு சிலர் மட்டும்தான் இயல்பான வாழ்க்கையை வாழ்பவர்களாக இருப்பார்கள். தங்களது பிரபலத்தை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு மக்களோடு மக்காளகவும் பயணிப்பார்கள்.
அப்படி ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார் 'வேட்டையன்' நடிகை ரித்திகா சிங். மும்பையில் நெருக்கடியான லோக்கல் டிரையினில் பயணித்துள்ளது குறித்து பதிவிட்டுள்ளார்.
“எனது ஹேன்ட்பேக்கில் நிறைய கீ செயின்கள் இருப்பதை அந்த பையன்கள் பார்த்து இன்னும் கூடுதலாக சேர்த்துவிட்டார்கள். அவர்களுக்கு என்னை ஞாபகமில்லை, காரணம் நான் எப்போதுமே மாஸ்க் அணிவேன். ஆனால், அவர்களை நான் கடந்த வாரம் கூடப் பார்த்தேன். அவர்களைத் தவிர்க்க நினைத்தேன், ஆனால், நேற்று அவர்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் மெட்ரோ ரயில் வந்த புதிதில் நடிகர் ஆர்யா கூட அதில் அடிக்கடி பயணம் செய்து வந்தார். இப்போதெல்லாம் பயணிப்பதில்லை போலிருக்கிறது. பொதுப் போக்குவரத்தை சினிமா பிரபலங்கள் பயன்படுத்துவது மிகவும் அபூர்வமானதுதானே.