நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
புகழ்பெற்ற அரேபிய கதை 'ஆயிரத்தொரு இரவுகள்'. இதில் இடம் பெற்ற முக்கியமான கதை அலிபாபாவும், அலாவுதீனும். இரண்டுமே தமிழ் சினிமாவில் படமாகி உள்ளது. 1955ம் ஆண்டு வெளிவந்த எம்.ஜி.ஆர் நடித்த 'அலிபாபாவும் 40 திருடர்களும்' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தமிழில் தயாரான முதல் கலர் (கேவா) படம் இது.
அலிபாபா கதையில் முதலில் நடித்தது எம்.ஜி.ஆர். தான் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அலிபாபாவாக முதலில் நடித்தது என்.எஸ்.கிருஷ்ணன். 1941ல் வெளியான 'அலிபாபாவும் 40 திருடர்களும்' படத்தில் அலிபாபாவாக என்.எஸ்.கிருஷ்ணன் நடித்தார். என்.எஸ்.கிருஷ்ணன் கதை நாயனாக நடித்த ஒரு சில படங்களில் இதுவும் ஒன்று.
அலிபாபா காதலிக்கும் மார்ஜியானாக என்.எஸ்.கிருஷ்ணனின் நிஜ மனைவி டி.ஏ.மதுரம் நடித்தார். அலிபாபாவின் கொடுமைக்கார அண்ணன் காசீமாக கன்னட நடிகர் ஹிரண்யா நடித்தார். கொள்ளைக்கூட்டத் தலைவனாக கே.பி.காமாட்சி நடித்தார். என்.எஸ்.பாலகிருஷ்ணன் இசையமைத்திருந்தார். இந்த படம் தோல்வி அடைந்தது.