போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் | 'அமரன்' வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வாரா 'மதராஸி' ? | ரிலீஸ் தேதி குழப்பத்தில் 'கருப்பு' : காத்திருக்கும் ரசிகர்கள் | பிளாஷ்பேக் : சூப்பர் ஸ்டாருக்கு பெயர் சூட்டிய சூப்பர் ஸ்டார் | பிளாஷ்பேக் : பாரதிராஜா இயக்கதில் நடிக்க மறுத்த சன்னி தியோல் | பாரிஜாதம் : புதிய தொடரில் ஆலியா மானசா |
'நேர்கொண்ட பார்வை' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் கிஷன் தாஸ். யு டியூப் மூலம் புகழ்பெற்ற இவர், சின்னத்திரை நடிகை பிருந்தாவின் மகன். அதன்பிறகு தர்புகா சிவா இயக்கத்தில் வெளியான 'முதல் நீ முடிவும் நீ' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சமீபத்தில் வெளியான 'சிங்கப்பூர் சலூன்' படத்திலும் நடித்திருந்தார். 'சிங்க்' என்ற வெப் தொடரிலும் நடித்தார். தற்போது தருணம், ஈரப்பதம் காற்று மழை படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் கிஷன் தாஸ் தனது நீண்ட நாள் காதலியான சுசித்ராவை திருமணம் செய்ய இருக்கிறார். இதற்கான நிச்சயதார்த்த விழா நடந்துள்ளது. இதில் நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர். இந்த படங்களை பகிர்ந்துள்ள கிஷன் தாஸ் “திருச்சிற்றம்பலம் படம் போலவே, நிஜ வாழ்விலும் என் நெருங்கிய தோழி சுசித்ராவுடன் திருமணம் செய்து கொள்ள உள்ளேன்” என பதிவிட்டுள்ளார். 'முதலும் நீ முடிவும் நீ' படத்தில் கிஷன் தாஸ் ஜோடியாக நடித்த மீதா ரகுநாத் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.