ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த குஷி படத்தை அடுத்து தற்போது சிட்டாடல் என்ற வெப்சீரிஸில் நடித்துள்ளார் சமந்தா. இந்த தொடரில் நடித்து வந்தபோது ஒருநாள் சமந்தா மயங்கி விழுந்துள்ளார்.
இது பற்றி அவர் கூறுகையில், ‛‛குஷி படத்திற்கு பிறகு சிட்டாடல் தொடரில் நடித்தேன். இந்த தொடரில் எனக்கு ஆக்ஷன் காட்சிகள் உள்ளன. ஆக்ஷன் அதிகம் என்பதால் உடல் ரீதியாக மிகவும் கடினமாக இருந்தது. கடும் வலியால் அவதிப்பட்டேன். ஒருநாள் திடீரென்று மயங்கி விழுந்தேன். அதையடுத்து என்னுடைய ஊட்டச்சத்துடன் நிபுணர் நான் எனர்ஜியுடன் நடிப்பதற்கான உதவிகளை செய்தார். அதனால் தான் சிட்டாடல் தொடரில் மேற்கொண்டு என்னால் எனர்ஜியுடன் நடிக்க முடிந்தது என்று தெரிவித்திருக்கிறார் சமந்தா.
சிட்டாடல் தொடரில் நடித்த சமயத்தில் சமந்தா தசை அழற்சி நோய் பாதிப்பில் இருந்தார். சிகிச்சை எடுத்துக் கொண்டே இந்த தொடரில் அவர் நடித்துள்ளார்.