ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
இயக்குனர் பாராதிராஜா தனது படங்களில் நடிக்கும் நடிகைகளை அடிப்பது, திட்டுவது ஒன்றும் புதிதில்லை. அவரிடம் அடி வாங்காத நடிகைகளே இல்லை என்பார்கள். அடி வாங்கியவர்களும் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் “மோதிர கையால் குட்டுப்பட்டேன்” என்று பெருமையாக சொல்வார்கள்.
அவர் நடித்து முடித்துள்ள 'கள்வன்' என்ற படத்தில் ஜி.வி.பிரகாசும், இவானாவும் நடித்துள்ளனர். படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய பாரதிராஜா "இந்த படத்தின் இயக்குநர் ஷங்கர் பிடிவாதக்காரன். நிச்சயம் அந்த பிடிவாதம் ஜெயிக்கும். சினிமாவில் அவனுக்குப் பெரிய இடம் காத்திருக்கிறது. இவானாவை ஒருநாள் திட்டிவிட்டேன். திறமையான நடிகை அவர். ஜிவி நல்ல இசையமைப்பாளர், நடிகர் அதைத்தாண்டி நல்ல மனிதர். வேறொரு டைமன்ஷனில் ஜிவியைப் பார்க்கலாம். இவானா சிறப்பாக நடித்துள்ளார்” என்றார்.
இதே விழாவில் இவானா பேசும்போது "'நாச்சியார்' படத்திற்குப் பிறகு ஜிவி பிரகாஷூடன் சேர்ந்து நடிக்கிறேன். அப்போது அவருடன் சரியாக நிறைய பேச முடியவில்லை. இப்போது நாங்கள் நல்ல நண்பர்கள். பாரதிராஜா சாருடன் நான் நடித்திருப்பது எனக்குப் பெருமை. இதயங்களை 'கள்வன்' நிச்சயம் திருடுவான்". என்றார்.
இந்த படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரி சார்பில் டில்லி பாபு தயாரிக்க, பி.வி.சங்கர் ஒளிப்பதிவு செய்து எழுதி இயக்கியுள்ளார், பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்க, ரேவா பின்னணி இசை அமைத்துள்ளார்.