யாரிடமும் எளிதில் சிக்க மாட்டேன் : கயாடு லோஹர் | 'கம் பேக்' கொடுக்கப் போகும் லைகா | மலையாள பட இயக்குனருடன் கைகோர்த்த ஜீவா | பாண்டிராஜ், விஜய் சேதுபதி படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை | விஜய்க்காக பின்னணி பாடிய ராப் இசைக் கலைஞர் அனுமான் கைண்ட் | கூலி படத்தை அடுத்து கைதி 2 வை இயக்கும் லோகேஷ் கனகராஜ் | அர்ஜூன் தாஸிற்கு தாதா சாகேப் பால்கே விருது!; 'ரசவாதி' படத்திற்காக அவர் பெறும் 3வது விருது | 7 வருடங்களுக்கு பிறகு திரைக்கு வரும் ஜி.வி. பிரகாஷ் படம்! | ஜெய்யின் 'வொர்கர்' புதிய பட அறிவிப்பு! | மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் வெளியாகாத ரெட்ரோ, ஹிட் 3 ஹிந்தி பதிப்புகள் ; காரணம் என்ன ? |
ஒரு திரைப்படம் தான் நினைத்த மாதிரி வரவில்லை என்பதற்காக அதை தீயிட்டு கொளுத்த தயாரிப்பாளரே உத்தரவிட்ட சம்பவம் தமிழ் சினிமாவில் நடந்தது.
1954ம் ஆண்டு மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த விஸ்வநாதன் என்பவரை நாயகனாக வைத்து, பாடல், நடனம் இல்லாமல் முதன் முதலாக ஏ.வி.எம் நிறுவனம் ஒரு படத்தை தயாரித்தது. அதனை வீணை எஸ்.பாலசந்தர் இயக்கினார். பாதி வரையில் வளர்ந்த நிலையில் படத்தை பார்த்த மெய்யப்ப செட்டியார் திருப்தி இல்லாமல் சிவாஜியை நாயகனாக நடிக்க வைத்து அந்த படத்தை மீண்டும் எடுக்க சொன்னார். இதற்கு பாலசந்தர் மறுக்கவே அவருக்கு பேசிய சம்பளத்தை கொடுத்து விட்டு படத்தை எரித்து விடும்படி உத்தரவிட்டார்.
இதனால் பயந்துபோன வீணை எஸ்.பாலச்சந்தர் எனக்கு சம்பளமே வேண்டாம் நீங்கள் சொன்னபடி எடுக்கிறேன் என்று எடுத்து முடித்தார். அந்த படம் தான் 'அந்த நாள்'.
1954ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் சிவாஜியுடன் பண்டரிபாய், பி.டி.சம்பந்தம், டி.கே.பாலசந்திரன், சூர்யகலா, ஏ.எல்.ராகவன், எஸ்.மேனகா, ஜெயகொடி கே.நடராஜ ஐயர், எஸ்.வி.வெங்கட்ராமன், சட்டாம்பிள்ளை, கே.என்.வெங்கட்ராமன், சி.பி.கிட்டான், கே.ராமராஜ் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இது தமிழில் பாடல்கள் இல்லாமல் வெளிவந்த முதல் படம்.
அகிர குரோசவாவின் 'ரசோமன்' என்னும் படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டது. வீட்டுக்குள் ஒரு கொலை நடக்கும். அந்த கொலையை அந்த வீட்டில் உள்ள ஒருவர்தான் செய்தார் என்பது தெரிகிறது. யார் செய்தது என்பதை கண்டுபிடிப்பதுதான் படத்தின் திரைக்கதை. துப்பறியும் படங்களின் முன்னோடி 'அந்த நாள்'.