மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
தமிழில் 'டாக்டர்' படத்தில் அறிமுகமாகி, 'எதற்கும் துணிந்தவன், டான், டிக் டாக், கேப்டன் மில்லர்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரியங்கா மோகன். தற்போது 'பிரதர்' படததில் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருப்பவர் பிரியங்கா மோகன். அவரது தோற்றமும், அவர் நடித்த கதாபாத்திரங்களும் அவரை ஒரு பக்கத்து வீட்டுப் பெண் தோற்ற நடிகையாகவே நமக்கு பழக்கப்பட்டுப் போனது. புடவையில் மிகவும் பாந்தமாக இருப்பவர் பிரியங்கா மோகன்.
தற்போது இன்ஸ்டாவில் அவர் பகிர்ந்த சில புகைப்படங்களைப் பார்த்த போது, யார் இவர், பாலிவுட் நடிகை போலவே இருக்கிறாரே என்று ஆச்சரியப்பட வைத்தது. தன்னால் மாடர்ன் கதாபாத்திரங்களிலும் பொருத்தமாக நடிக்க முடியும் என இப்படி புகைப்படங்களை எடுத்துள்ளாரோ ?.